search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDIA allaince"

    • சி.பி.ஐ. பதிவுசெய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிக்கப்பட்டது.
    • டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகளில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி கெஜ்ரிவால் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து வருகிறார்.

    அமலாக்கத்துறை பதிவுசெய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஜூலை 12-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. ஆனால், சி.பி.ஐ. பதிவுசெய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சி.பி.ஐ. பதிவுசெய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட் உத்தரவிட்டது.

    சிறையில் உள்ள கெஜ்ரிவாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் திகார் சிறை நிர்வாகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி அமைச்சருமான கோபாப் ராய், சரத்சந்திர தேசியவாத கட்சியின் தலைவரான சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


    • கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • பாராளுமன்ற அத்துமீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு என்றார்.

    புதுடெல்லி:

    'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல் மந்திரி ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இந்தியா கூட்டணி சார்பில் டிசம்பர் 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்.

    கட்டடம் திறப்புக்குச் செல்லும் பிரதமர் மோடி பாராளுமன்றம் வர மறுக்கிறார்.

    பாராளுமன்ற அத்துமீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

    • இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
    • மம்தாவின் கருத்தில் இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

    புதுடெல்லி:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தமிழக முதல் மந்திரி ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, ஆர்ஜேடி தலைவர் லாலு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். மம்தாவின் கருத்திற்கு வைகோ, உபி. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.

    மம்தாவின் கருத்தில் இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

    ×