என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "India cricket team"
கடந்த 6 மாதமாக சதம் அடிக்காத இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் 143 ரன்கள் எடுத்து தன் மீதான விமர்சனத்துக்கு விடை அளித்தார். போட்டிக்கு பிறகு ஷிகர் தவான் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். முதலில் நான் பத்திரிகைகள் படிப்பதில்லை. எனக்கு தேவையில்லாத விஷயங்களை எடுத்து கொள்ளமாட்டேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. எனது சொந்த உலகில் நான் வாழ்கிறேன். எனது எண்ணங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன்.
அமைதியான நிலையில் இருக்கும்போது நான் நன்றாக விளையாடுவேன். மன வேதனை அடையும்போது அதில் இருந்து வேகமாக விடுபட்டு விடுவேன். என்னை பற்றி என்ன எழுதுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நல்ல மனநிலையில் இருந்து எனது செயல்களை செய்ய வேண்டும் என்று விரும்புவேன்.
ரிஷப் பந்தை, டோனியுடன் ஒப்பிடக்கூடாது. ஆஷ்டன் டர்னரை ஸ்டம்பிங் செய்து ஆட்டம் இழக்க வைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம். பனியின் தாக்கம் காரணமாக பந்து கையை விட்டு நழுவியது. எனவே கேட்ச் செய்வது கடினமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார். #ShikharDhawan #INDvAUS
‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்திருந்தன.
‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்காள தேசம் அணிகளும் முன்னேறும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் விளையாடிய போட்டிகள் அனைத்து ‘ஒன் சைடு’ போட்டியாக இல்லை. இழுபறியாகவே சென்றது. லீக் சுற்றில் இலங்கை, வங்காள தேசத்தை துவம்சம் செய்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறியது.
சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. பின்னர் பாகிஸ்தான் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.
பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சோயிப் மாலிக் நிலைத்து நின்று 43 பந்தில் 51 ரன்கள் அடிக்க 49.3 ஓவரில் இலக்கை எட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
2-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான்கு ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் மூன்று ரன்னில் தோல்வியை சந்தித்தது.
நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.
கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’ ஆனது. மற்ற அணிகள் மோதிய ஆட்டங்கள் பெரும்பாலும் ‘ஒன் சைடு’ ஆட்டமாகவே சென்றது. ஆனால், ஆப்கானிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் சடும சவால் கொடுத்தது. இதனால் அந்த அணிக்கு ஒரு சபாஷ் போடலாம்.
குறிப்பாக 4-வது இடம் இன்னும் காலியாகவே இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் டோனி 4-வது இடத்திற்கு சரியான நபர் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜாகீர்கான் கூறுகையில் ‘‘யாராவது ஒருவர் 4-ம் இடத்தில் களம் இறங்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அது எம்எஸ் டோனியாகவே இருக்க முடியும். இந்திய அணியின் தோல்விகளைப் பார்த்தீர்கள் என்றால், நல்ல தொடக்கம் இல்லாத போட்டிகளில் தோல்விகளை சந்தித்திருக்கும். மோசமான தொடக்கத்திலிருந்து பின்னால் மீள முடிவதில்லை.
எனவே 4-ம் நிலையில் அனுபவமிக்க வீரர் இறங்க வேண்டும். அந்த நிலையில் நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து வெற்றிப்பாதைக்குத் திருப்பும் வீரர் தேவை. அவர் அவருடன் தனக்கு பின்னால் வரும் வீரர்களையும் தன்னுடன் சேர்த்து கடைசி வரை கொண்டு செல்பவராக இருக்க வேண்டும். இதற்கு தோனியை விட்டால் வேறு ஆளில்லை” என்றார்.
இந்தியாவை 4-1 என வீழ்த்தியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 போட்டிகளில் தோல்வியடைந்தாலும் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது.
4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்தியாவிற்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்தது. தற்போது 8 புள்ளிகள் அதிகம் பெற்று 105 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
1-4 என படுதோல்வியடைந்ததால் இந்தியா 10 புள்ளிகளை இழந்து 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. 109 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
லண்டன்:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஹர்த்திக் பாண்ட்யா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தனது கடைசி டெஸ்டில் விளையாடும் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான குக்குக்கு அனைத்து வீரர்களும் மரியாதை செய்தனர்.
நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து இருந்தது. குக் 71 ரன்னும், மொய்ன் அலி 50 ரன்னும் எடுத்தனர். பட்லர் 11 ரன்னும், ஆதில் ரஷீத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், பும்ரா, ரவிந்திரஜடேஜா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 48 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது.
நேற்றைய ஆட்டம் குறித்து ஜடேஜா கூறியதாவது:-
எங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குக்கும், மொய்ன்அலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவுண்டரிகளை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது எங்களது திட்டமாக இருந்தது. 2-வது செசனில் நாங்கள் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. ஆனால் ரன்களையும் வாரி கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆடுகளம் சமமான நிலையில் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஆடுகளத்தில் லேசான மாற்றம் இருந்தது. இதை பயன்படுத்தி வேகப்பந்து வீர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 3 வேகப்பந்து வீரர்களும் அபாரமாக பந்து வீசினார்கள்.
பந்துவீச்சில் என்னால் நேர்த்தியாக செயல்பட முடிந்தது. இதேபோல பேட்டிங்கிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 4 டெஸ்டிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அஸ்வின் காயம் அடைந்ததால் 5-வது டெஸ்டில் வாய்ப்பை பெற்றார். அவர் ஜென்னிங்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.
இதற்கிடையே இந்த டெஸ்டில் கருண்நாயரை சேர்க்காதது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆகாஷ் சோப்ரா, பத்ரிநாத், வர்ணனையாளர் ஹர்ஷா போகலே உள்ளிட் டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக கருண்நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுமுக வீரர் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. #ENGvIND
லண்டன்:
விராட்கோலி தலைமையிலானா இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டி தொடர் 12-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி முடிகிறது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மார்கன் தலைமையில் 14 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் விளையாடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ்லோக்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.
14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வருமாறு:-
இயன் மார்கன் (கேப்டன்), மொய்ன்அலி, பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் படயர் ஜேக்பால், அலெக்ஸ் ஹொல்ஸ், புளுங்கட், ஆதில் ரஷித், ஜோரூட், ஜேசன் ராய், டேவிட் விஸ்லி, மார்ருவுட், டாம்குர்ரன். #INDvsENG
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்