search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Democratic Youth Association"

    • 12 மணி நேர வேலை சட்டத்திற்கு எதிராக போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.
    • இது தொடர்பாக அவசர அவசரமாக மதுரை மாவட்ட விசாரணை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையும் தாக்க செய்யப்பட்டது

    மதுரை

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சார்பில் வக்கீல் போனிபாஸ் உள்ளிட்ட 26 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை உறுதி சட்டத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பி னர் மாணவர்கள் மீது மதுரை திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவசர அவசரமாக மதுரை மாவட்ட விசாரணை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையும் தாக்க செய்யப்பட்டது.

    இதனால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் வேலைக்கு செல்வது, வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட், வாகன டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது உள்ளிட்டவற்றில் பிரச்சினை ஏற்பட்டது. எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேரம் வேலை சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அந்த சட்டத்தை திரும்ப பெற்றது.

    ஆனால் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவசர அவசரமாக மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.

    அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்

    • கோல்டன் நகா் சாலை போதிய பராமரிப்பில்லாமல் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
    • பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சி, கோல்டன் நகா் சாலை போதிய பராமரிப்பில்லாமல் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதனை கோல்டன் நகா் கிளை செயலாளா் பிரனேஷ் தொடங்கி வைத்தாா். இதில், வாலிபா் சங்க வடக்கு மாநகரச் செயலாளா் விவேக், வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினா்கள் பிரவீன்குமாா், சீனிவாசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினா் மனோகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×