என் மலர்
நீங்கள் தேடியது "Indian Steve Smith"
- ரிச்சர்ட் கெட்டில்பரோவை தெரியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது.
- டோனி ரன் அவுட் ஆகும் போது களத்தில் நின்ற ரிச்சர்ட், ஷாக் ரியாக்ஷன் கொடுத்து பிரபலமானவர்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித். இவரது பேட்டிங் ஸ்டைலில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நடனம் ஆடுவார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கால் சுழன்று கொண்டே இருக்கும்.
பந்து கீப்பரிடம் சென்ற பிறகு பேட்டை வைத்து ஸ்டைலாக போஸ் கொடுப்பார். மேலும் தடுப்பாட்டம் ஆடிய பிறகு எதிர் முனையில் இருக்கும் பேட்டரிடம் பேட்டை வைத்தே நில் என சைகை காட்டுவார். அவரது பேட்டிங் ஸ்டைலுக்கு பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
இந்நிலையில் அவரது பேட்டிங் ஸ்டைலை போல இந்தியாவில் ஒரு சிறுவன் அவரை போலவே பேட்டிங் ஆடியுள்ளார். இந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோ சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்தியாவின் ஸ்டீவ் ஸ்மித் என தலைப்பிட்டுள்ளார்.
ரிச்சர்ட் கெட்டில்பரோவை தெரியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது களத்தில் நின்ற ரிச்சர்ட் ஷாக் ரியாக்ஷன் கொடுப்பார். அந்த ரன் அவுட் மூலம் மிகவும் பிரபலமானவர் இவர். இவர் களநடுவராக இருந்தால் இந்தியா தோல்வியடையும் என்ற நிலை இருந்து வந்தது. அந்த நிலையை கடந்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வந்தது.
Steve Smith from India ?? #funny pic.twitter.com/MfmHhLU1Pq
— Richard Kettleborough (@RichKettle07) January 8, 2025
நியூசிலாந்து - இந்தியா மோதிய போட்டியில் மீண்டும் இவரே கள நடுவராக பணியாற்றினார். இதனால் இந்த போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவும் என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அதை முறியடிக்கும் விதமாக இந்தியா அந்த போட்டியில் வெற்றி பெறும்.
இப்படி இந்திய ரசிகர்களால் அதிக கவனம் ஈர்த்த இவர் அடிக்கடி இந்திய கிரிக்கெட் சம்மந்தமாக பல வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்காமக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த வீடியோ பதிவிட்ட நிலையில் இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.