search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian women team"

    • 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
    • நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    மிர்புரி:

    இந்தியா-வங்காளதேசம் மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது.

    பரபரப்பான இந்த ஆட்டம் வெற்றி, தோல்வியன்றி 'டை'யில் முடிவடைந் தது. முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 49.3 ஓவரில் 225 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது.

    இந்தப் போட்டி'டை'யில் முடிந்ததில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனது. இதனால் இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன. முதல் ஆட்டத்தில் வங்காள தேசமும் (40 ரன்), 2-வது போட்டியில் இந்தியாவும் (108 ரன்) வெற்றி பெற்று இருந்தன.

    3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இந்நிலையில் நடுவர்களின் முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளித்ததாக இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் குற்றம் சாட்டியுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    இரு அணிகளுமே மிகச் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர். வங்காள அணியினர் நன்றாக பேட்டிங் செய்தனர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆடினார்கள். இடையில் நாங்கள் கொஞ்சம் ரன்களை கொடுத்து விட்டோம்.

    நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பரிசளிப்பு விழாவின்போது வங்காளதேச கேப்டனும், வீராங்கனைகளும் அவமரியாதை செய்தனர்.

    இவ்வாறு ஹர்மன் பிரீத் கவூர் கூறியுள்ளார்.

    நியூலாந்து பெண்கள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பெண்கள் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது. #NZvIND #WomenCricket
    ஹாமில்டன்:

    இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில், முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சோபி டேவின் 72 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 86 ரன்கள் (62 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசிய போதிலும், மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் காஸ்பெரேக் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரில் மிதாலி-தீப்தி ஷர்மா கூட்டணியால் 2 பவுண்டரி உள்பட 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி கண்டது. இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. மிதாலி ராஜ் 24 ரன்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி), தீப்தி ஷர்மா 21 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அரைசதத்துடன் 2 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீராங்கனை சோபி டேவின் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது.



    தோல்விக்கு பிறகு இந்திய வீராங்கனை மந்தனா கூறுகையில், ‘எங்களது வீராங்கனைகள் நன்றாக போராடியதாகவே நினைக்கிறேன். இந்த தொடரை திரும்பி பார்த்தால் 70, 80 சதவீதம் வெற்றி வாய்ப்பில் இருந்தே தோற்று இருக்கிறோம். பேட்டிங்கில் இந்த குறைபாட்டை நாங்கள் வெகு சீக்கிரமாக சரி செய்ய வேண்டும். யாராவது ஒரு வீராங்கனை 20 ஓவர் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியமாகும். இன்றைய ஆட்டத்தை நான் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று விரும்பினேன். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது. #NZvIND #WomenCricket
    ஆக்லாந்து:

    இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 72 ரன்னும், மந்தனா 27 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன்னும் எடுத்து கேட்ச் ஆனார்கள். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. சுசி பேட்ஸ் 62 ரன்கள் (52 பந்து, 5 பவுண்டரி) விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

    கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் மான்சி ஜோஷி வீசினார். அதில் முதல் பந்தை கேட்டி மார்ட்டின் பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அடுத்து களம் கண்ட ஹன்னா ரோவ் 3-வது பந்தில் 2 ரன்னும், 4-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். காஸ்பெரெக் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன் பின்னர் கடைசி பந்தில் ஹன்னா ரோவ் ஒரு ரன் எடுத்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது.

    தோல்வி குறித்து இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கூறும் போது ‘எங்கள் பந்து வீச்சாளர்களை பாராட்ட தான் வேண்டும். நாங்கள் நல்ல ஸ்கோர் எடுக்கவில்லை. 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். நியூசிலாந்து அணியினர் எங்களை விட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்’ என்றார்.

    நியூசிலாந்து அணியின் கேப்டன் சட்டர்த்வெய்ட் அளித்த பேட்டியில், ‘நாங்கள் இன்னும் எளிதாக வெற்றி பெற்று இருக்க வேண்டும். இருப்பினும் தொடரை வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டார். #NZvIND #WomenCricket

    ×