search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Film Festival"

    • அயலி கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
    • பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் உள்ள அயலி ஜீ5 தளத்தில் வெளியானது.

    இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    அயலி கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை அயலி இணையத் தொடர் பெற்றது.

    இந்நிலையில், பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீ5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு அயலி பிரந்துரை செய்யப்பட்டுள்ளது.

    கோவாவில் நடைபெறும் 55வது சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த இணைய தொடருக்கான விருதுக்கு தமிழில் வெளியான அயலி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இதில், காலாபாணி, கோட்டா ஃபேக்டரி, லாம்பான், ஜூப்ளி ஆகிய மற்ற மொழி இணைய தொடர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    • படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
    • அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”

    படங்கள் திரைக்கு வரும் முன்பே அதற்கு அங்கீகாரம் கிடைப்பது என்பது மிக பெரிய விஷயம் மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் அதில் பணியாற்றி அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் மாபெரும் வெற்றி ஆகும். அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் "ஏழு கடல் ஏழு மலை",

    கடந்த 2024 ஜனவரியில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் படைப்பான 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகி மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.


    இந்நிலையில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் மற்றுமொரு விழாவான ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

    ராம் இயக்கி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ளனர். இதையடுத்து படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கொட்டுக்காளி 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருந்தது.
    • ஒரு தமிழ்ப் படம் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமில்லாமல் பாடல் பாடுவதிலும், பாடல் எழுதுவதிலும், படம் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

    இவர் தற்போது தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'கொட்டுக்காளி' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

    கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கொட்டுக்காளி 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருந்தது. ஒரு தமிழ்ப் படம் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போது ருமேனியாவின் டிரான்ஸில்வேனியா சர்வதேசத் திரைப்பட விழாவிலும் இந்தப் படம் திரையிட தேர்வாகி இருக்கிறது.

    பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படமும் இந்த டிரான்ஸில்வேனியா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது.
    • மத்திய அரசு சிறந்த வாழ்நாள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பனோரமா பிரிவில் திரைப்படம் மற்றும் குறும்படங்களை திரையிடுவதற்கான விண்ணப்பங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் வரவேற்றது.

    இதில், திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 10ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கோவாவின் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸுக்கு, 54வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில், புகழ்பெற்ற சத்யஜித் ரே திரைப்பட வாழ்நாள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நமது நாட்டின் மீது அவருக்குள்ள ஆழ்ந்த அன்பு நன்கு அறியப்பட்டதாகும். மேலும், நமது செழுமையான சினிமா கலாச்சாரம் மற்றும் தனித்துவமான பாரம்பரியங்களை வெளிப்படுத்த தெற்காசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவிற்கு அவரை, கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் அவர்களது மகனை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    பாரத்திற்கும், 54வது இந்திய சர்வதேச விழாவிற்கும் அன்புடன் வரவேற்க்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் தொடங்கியது.
    • நாளை வரை நடைபெறும் இவ்விழாவில் விருது பெற்ற சர்வதேச அளவிலான சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது.

    புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சே, மும்பை மத்திய திரைப்பட பிரிவு, தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம், தமிழ்நாடு முற்பாக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் இணைந்து 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் தொடங்கியது.


    விழாவை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக பொது மேலாளர் ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சங்கம் ஆதவன்தீட்சண்யா, எழுத்தாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    விழாவில் திரைப்பட குறிப்பு புத்தகத்தை அலையன்ஸ் பிரான்சே, இயக்குனர் லொரேன்ஜலிகு வெளியிட்டார். நாளை (6-ந்தேதி) வரை நடைபெறும் இவ்விழாவில் விருது பெற்ற சர்வதேச அளவிலான சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது. 9 நாடுகளை சேர்ந்த படங்களுடன் 32 படங்கள் திரையிடப்படுகிறது. தமிழகம், புதுவையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளம் படைப்பாளிகளின் இலக்கிய படைப்புகளும் இடம்பெறுகிறது.

    சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, இந்த ஆண்டு 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்பிரிசியே‌ஷன் பவுன்டே‌ஷன் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    2018-19ம் கல்வியாண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதலாமாண்டு முதுகலைத் தமிழ்ப் பயிலும் மாணவர்களுள் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு கல்வித் தொகையாக மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து, மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.


    தமிழ் வளர்ச்சித் துறையின் 2018-19-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்க்குடிமகன், மேலாண்மை பொன்னுச்சாமி மற்றும் முனைவர் பொன். சௌரிராசன் ஆகிய தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு அதற்கான பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, முனைவர் மு. தமிழ்க்குடிமகன், மேலாண்மை பொன்னுச்சாமி மற்றும் முனைவர் பொன். சௌரிராசன் ஆகிய தமிழறிஞர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய்க்கான பரிவுத் தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

    சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் தமிழ்பிராமி எழுத்தில் அணியமாக்கப்பட்டுள்ள ‘திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்’ என்ற நூலினையும் வெளியிட்டார். #TNCM #Edappadipalaniswami
    65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை வென்ற ‘டூலெட்’ திரைப்படம் பல்வேறு விழாக்களில் பங்கேற்று வரும் நிலையில், 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. #TOLET #Chezhiyan
    65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

    நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருப்பதாக இயக்குநர் செழியன் கூறினார்.



    இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ படத்தை தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. #TOLET #Chezhiyan

    ×