என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jeep accident"
கும்மிடிப்பூண்டி:
தேர்தல் பறக்கும் படை அதிகாரியான மீஞ்சூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் 3 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட ஆரணியில் இருந்து புதுவாயல் நோக்கி ஒரு ஜீப்பில் சென்றனர்.
ஜீப்பை டிரைவர் கண்ணன் ஓட்டினார். அதில் வெங்கல் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியற்றி வந்த கோவிந்தசாமி (வயது 55) மற்றும் போலீஸ்காரர்கள் கமலநாதன், லாசர், பெண் காவலர் இந்துமதி ஆகியோர் இருந்தனர்.
புதுவாயல் அருகே ஜீப் சென்று கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய போலீஸ்காரர் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குண சேகரன், டிரைவர் கண்ணன், போலீஸ்காரர்கள் கமலநாதன், லாசர், இந்துமதி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் குணசேகரன், கமலநாதன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பலியான கோவிந்தசாமியின் சொந்த ஊர் தொளவேடு காலனி ஆகும். அவருக்கு லீலாவதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
தொடர் பணி மற்றும் அதிகாலை நேரத்தில் சென்றதால் டிரைவரின் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் நேற்றிரவு புனித யாத்திரை மேற்கொள்ளும் நைமிஷரண்யா பகுதியில் இருந்து ஜீப் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. ஜர்வால் சாலை வழியே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த ஜீப், சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த டிராக்டர் டிராலியின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இவ்விபத்தில் ஜீப்பில் பயணம் செய்தவர்களில், 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 6 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த துயர சம்பவத்திற்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். #UPAccident
கொழிஞ்சாம்பாறை:
கர்நாடக மாநிலம் மங்களாபுரத்தை சேர்ந்த 18 பேர் பாலக்காட்டில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு ஜீப்பில் வந்தனர். விசேஷம் முடிந்து நள்ளிரவு ஊருக்கு புறப்பட்டனர்.
இன்று காலை காசர்கோடு அருகே உள்ள உப்பளா என்ற இடத்தில் வந்தபோது எதிரே மங்களாபுரத்தில் இருந்து காசர்கோட்டுக்கு சரக்கு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த லாரி ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் அப்பளம்போல் நொறுங்கியது.
சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஜீப்பில் இருந்தவர்களை மீட்டபோது சம்பவ இடத்திலேயே 5 பேர் ரத்தவெள்ளத்தில் பலியானார்கள்.
மற்றவர்கள் படுகாயத்துடன் அலறி சத்தம்போட்டனர். காசர்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தன்.
இதில் 3 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இதனையடுத்து அவர்கள் மங்களாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று அதிகாலை முதலே கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரங்கள் உடனே தெரியவில்லை. இது குறித்து காசர்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் மானந்தங்குடியை சேர்ந்தவர் குமார்(வயது42). இவரது நண்பர்கள் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த அன்பழகன்(30), நெடுங்குளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(38). 3 பேரும் பிளம்பர்கள்.
நேற்று 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது நன்னிலம் மதுவிலக்கு போலீசார் ஜீப்பில் ரோந்து பணிக்கு சென்றுள்ளனர். போலீஸ்காரர் முருகன் ஜீப்பை ஓட்டி சென்றுள்ளார். பூந்தோட்டம் பகுதி பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது 3 பேர் மீதும் போலீசாரின் ஜீப் மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 2 பேரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.
விபத்து குறித்து குமாரின் அண்ணன் சங்கர், பேரளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்