search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jobless"

    மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் 8 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக சரத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். #SharadYadav #GST
    பாட்னா:

    லோக்தந்திரிக் ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சரத் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் எனக்கூறி மோடி அறிவித்தார். ஆனால், அவர் கூறியதற்கு எதிராகவே நடந்துவருவதாகவும், இந்த திட்டங்களுக்கு அடிப்படை முன்னேற்பாடு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றால் விவசாயிகளும், இளைஞர்களும் அதிக அளவில் துன்பப்பட்டதாகவும், அதனை நிவர்த்தி செய்ய மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்த இரண்டு திட்டங்களுமே சிறு வணிகர்களுக்கு மிகவும் சிரமம் அளித்ததாகவும், அதனால் அவர்களின் வணிகத்தை குறைப்பது அல்லது கைவிடுவதை தவிர வேறு வழியில்லாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டியால் 7 முதல் 8 கோடி பேர் வரை வேலை இழந்துள்ளதாகவும், இந்த நிலையில் ஜி.எஸ்.டியின் ஓராண்டு வெற்றியை மோடி அரசு கொண்டாடிவருவது உண்மைக்கு எதிரானது என்றும் சரத் யாதவ் தெரிவித்துள்ளார். #SharadYadav #GST
    வேலை இல்லாததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37), கூலித்தொழிலாளி. ராஜா தினமும் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா (29) என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

    தற்போது வேலை இல்லாததால் வருமானமும் இல்லை. இதனால் மனவேதனை அடைந்த ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சரண்யா கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×