என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Johnson"
- நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம்.
- சமீப காலங்களில் தடுமாறும் அவருக்கு ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும் என்று ஜான்சன் கூறினார்.
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 6-வது முறையாக வென்ற ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் அந்த அணி அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14-ம் தேதி சிட்னி நகரில் துவங்குகிறது. இதில் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் சமீப காலங்களாகவே சுமாரான ஃபார்மில் தடுமாறி வருவதால் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய டேவிட் வார்னருக்கு இவ்வளவு மரியாதையாக ஓய்வு கொடுப்பது ஏன்? என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முடிந்து 5 வருடங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இப்போது அவர் வெளியேறும் விதம் அதே திமிர்த்தனம் மற்றும் நம் நாட்டிற்கு அவமரியாதை செய்த பின்னணியில் உள்ளது. ஏனெனில் நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம். இங்கே சமீப காலங்களில் தடுமாறும் அவருக்கு ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும்? என்று யாராவது சொல்லுங்கள்.
குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திய ஒருவருக்கு மைதானத்தின் நடுவில் ஹீரோ போல் வழி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது ஏன்? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை விட மிகவும் உயர்ந்தவரா? அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி நண்பராக இருப்பதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி இப்படி டேவிட் வார்னருக்கு ஆதரவாக வழியனுப்பும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளாரா.
என்று ஜான்சன் விமர்சித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்