என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kalaignar Centenary Library"
- காலை 9 மணிக்கு மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா மற்றும் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளதால் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
திருப்பூர்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தி.மு.க. கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 9 மணிக்கு மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா மற்றும் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் காலை 11 மணிக்கு திருப்பூர் அங்கேரிபாளையம் ஜெகா கார்டன் முத்துகிருஷ்ணன் திருமண மண்டபத்தில் நடக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 265 ஊராட்சிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளதால் திருப்பூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
- 2 பிரிவுகளை மட்டும் பொதுமக்கள் பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.
தமிழக அரசு சார்பில் மதுரையில் பிரமாண்டமாக 'கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் மற்றுமொரு அடையாளமாக உள்ளது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில் 2 நாட்களாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.
2 நாட்களாக மதுரையில் மழை பெய்து வரும் நிலையில், நவீன அறிவியல் தொழில்நுட்ப அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குள் மழை நீர் புகுந்தது. கீழ் தளத்தில் உள்ள கலைக்கூடம் மற்றும் பார்வையற்றோர் பிரிவு ஆகியவை தண்ணீரில் மிதக்கிறது.
இதனால் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டடத்திற்கு வெளிப்புறமாக செல்லக்கூடிய மழைநீர் குழாய் உடைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனால் இந்த 2 பிரிவுகளை மட்டும் பொதுமக்கள் பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், வழக்கம்போல நூலகம் செயல்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குள் புகுந்த மழைநீர் | Kalaignar https://t.co/YpY1tzmhtX#Kalaignar #Kalaignarlibrary #thanthitv
— Thanthi TV (@ThanthiTV) May 21, 2024
- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையிடுவதற்காக அழைத்து வரப்படுகின்றனர்.
மதுரை மாநகரில் புது நத்தம் சாலையில் ரூ.218 கோடியில் 8 தளங்களுடன் அதிநவீன வசதிகள் கொண்ட நூலகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து இந்த நூலகம் செயல்பட தொடங்கியுள்ளது. தினமும் ஏராளமானோர் நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் இந்த நூலகத்தை பார்வையிடுவதற்காக அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து, "இதுவரை இந்த நூலகத்திற்கு 2 லட்சத்து 41,314 வாககர்கள், மக்கள், மாணவர்கள் வருகை தந்து பயனடைந்துள்ளதாக" பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்