search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalingarayan canal"

    • அணையில் நீர்மட்டம் சரிந்ததால் கீழ் பவானி பாசனத்தின் இரண்டாம் போகத்துக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
    • குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரால் காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுக்கு 10 மாதங்கள் காளிங்கராயன் வாய்க்காலில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். பாசனப்பகுதியில் கரும்பு, வாழை, நெல், மக்காச்சோளம், மஞ்சள், எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படும். ஆண்டுக்கு மூன்று போகம் விளைய கூடிய இப்பாசனத்திற்கு அட்டவணைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16-ந் தேதி கண்ணீர் திறக்கப்பட்டு, ஏப்ரல் 30-ம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும்.

    இந்த ஆண்டு பவானிசாகர் அணைக்கான நீர் பிடிப்பு பகுதியில் மழை இன்மையாலும், பிற பகுதி மழைநீர் வரத்து இன்றியும், அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிந்தது. குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையில் நீர்மட்டம் சரிந்ததால் கீழ் பவானி பாசனத்தின் இரண்டாம் போகத்துக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டம் உட்பட அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு குறைந்த அளவு நீர் வரத்தாகி வருகிறது. கடந்த மே மாதம் 15-ந் தேதி அணையின் நீர்மட்டம் 44.35 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி 57.71 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தாலும் சில நாட்களாக நீர் வரத்து மீண்டும் குறைந்து விட்டது.

    வழக்கமாக இந்த மாதத்தில் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேல் இருக்கும். அதனால் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு 57.71 அடியாக நீர் திறப்பு உள்ளதாலும் அணைக்கான நீர் வரத்து 600 கன அடியாக உள்ளதுடன் தினமும் குடிநீர் தேவைக்கு 150 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் கவலை அளிக்கும் படியே உள்ளது.

    இந்த சூழலால் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்க இயலாத நிலை உள்ளதால் காளிங்கராயன் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தால் மட்டுமே அடுத்த சில நாட்களில் காளிங்கராயன் பாசனத்திற்கும் ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் வழங்க இயலும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • ஆணின் உடல் மிதந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நஞ்சை கொள்ளாநல்லி, ஆட்டுக்காரன்புதூர் அருகே காளிங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு மலையம்பாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. அந்த நபர் காளிங்கரான் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பாசன பகுதியில் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்ப டுகிறது.
    • பழுதான மதகுகள், ஷட்ட ர்களில் சிறிய பணி கள், கரைகளில் முக்கிய இடங்களில் பழுது நீக்கப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், காளிங்கராயன்பாளையம் அணையில் இருந்து பிரிந்து, காளிங்கராயன் வாய்க்கால் மூலம், 15,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தருகிறது.

    பாசன பகுதியில் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்ப டுகிறது. ஆண்டு தோறும் ஜூன் 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்ரல் 30-ந் தேதி நிறுத்த ப்படும். ஒன்றரை மாத கால பராமரிப்புக்குப்பின், ஜூன், 16-ந் தேதி மீண்டும் பாசன த்துக்கு திறக்கப்படும்.

    பவானிசாகர் அணையில் நீர் இருப்பு உள்ளதால் வரும் 16-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என காளிங்கராயன் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி குறிப்பிட்ட நாளில் திறக்க கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

    இதுபற்றி நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்தாண்டு வழக்கமான தேதியில் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். முன்னதாக வாய்க்காலில் பராமரிப்பு பணி கள் மே ற்கொள்ள வேண்டும். பராமரி ப்பு பணிகளு க்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது.

    இதனால் அத்யாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ள ப்படும். குறிப்பாக தண்ணீர் ஓட்ட த்தை தடுக்கும் ஊனா ங்கொடி, ஆகாயத்தாமரை போன்றவற்றை அகற்றி கழிவுகள் வெளியேற்ற ப்படும்.

    பழுதான மதகுகள், ஷட்ட ர்களில் சிறிய பணி கள், கரைகளில் முக்கிய இடங்களில் பழுது நீக்கப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும்.

    இப்பணிகள் ஓரிரு நாளில் தொடங்கி அடுத்த 10 நாட்களில் நிறைவு செய்யப்படும். அதன்பின், காளிங்கரா யனில் தண்ணீர் திறக்க ப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

    • பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் 2-ம் பருவ பாசனத்துக்கு நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • நாள் ஒன்றுக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் 2-ம் பருவ பாசனத்துக்கு நாளை முதல் (ஞாயிற்றுக்கிழமை) ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மொத்தம் 5,184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நாள் ஒன்றுக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன் மூலம் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • இதனால் வேதனை அடைந்த பாசமலர் காளிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் கே.எஸ்.நகர் பகுதியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் அந்த பெண் குறித்து அடையாளம் தெரியவந்தது. ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆர்.என்.புதூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி பாசமலர் (48) என தெரிய வந்தது.

    திருநாவுக்கரசுக்கும் பாசமலருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருநாவுக்கரசு கட்டிட வேலை செய்து வருகிறார். பாசமலரும் கூலி வேலை செய்து வந்தார். கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இதனால் வேதனை அடைந்த பாசமலர் நேற்று ஆர். என்.புதூர் அருகே காளிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தார்.

    சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கினார். அவரது உடல் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகரில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த போது போலீசார்மிட்டது விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நஷ்டம் காரணமாக மன வேதனையில் இருந்த ஆறுமுகம் காலிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, அகத்தியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (62). இவர் வீட்டு உபயோக பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தார். கடந்த 2 வருடமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஆறுமுகம் சரிவர வியாபாரம் செய்யாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆறுமுகம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. ஆறுமுகம் மகன் கார்த்திகேயன் தந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.

    இந்நிலையில் கணபதிபாளையம்-மன்னதம்பாளையம் இடைப்பட்ட பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று முதியவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தவர் தனது தந்தை என உறுதி செய்தார்.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமு கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன வேதனையில் இருந்த ஆறுமுகம் காலிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காலிங்கராயன் வாய்க்கால் கரையில் வரும்போது டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காலிங்கராயன் வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    கொடுமுடி:

    கரூர் மாவட்டம், மண்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன் (38) கரும்பு லோடு ஏற்றிய டிராக்டரை ஓட்டி வந்தார். சம்பவத்தன்று மதியம் 2.30 மணி அளவில் கிளாம்பாடி இரும்பு பாலம் என்ற இடத்தில் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் வரும்போது டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காலிங்கராயன் வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது.

    இதில் ஓட்டுநர் பாலசுப்பிரமணினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பாலசுப்பிரமணியத்தை அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    ×