search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karaipudur panchayat"

    • குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
    • குடிநீர் வரி ரசீது நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் இரண்டையும் கொடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் தங்களின் குடிநீர் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கரைப்புதூர் ஊராட்சி செயலாளர் காந்திராஜ் கூறுகையில் "கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்கள் நடப்பு ஆண்டு குடிநீர் வரி ரசீது நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் இரண்டையும் கரைப்புதூர் ஊராட்சி அலுவலகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    எனவே குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை தவிர்க்க இந்த மாத (மார்ச்) இறுதிக்குள் பொதுமக்கள் கொடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
    • ராமசாமி, கேபிள் மணி, சுமித்ராமற்றும் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.இது குறித்த துண்டு பிரசுரங்களை வியாபாரிகள்,மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன், கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.சித்துராஜ், ஊராட்சி செயலாளர் காந்திராஜ், வார்டு உறுப்பினர்கள் உமா மகேஷ்குமார், ஜோதிமணி முத்துசாமி,சாந்தி ராமசாமி, கேபிள் மணி, சுமித்ராமற்றும் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
    • 120 மனுக்களுக்கு உரிய கட்டணம் செலுத்தியதை ஆய்வு செய்து அவர்களுக்கு வரன் முறை அனுமதி வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கிராம ஊராட்சிகளான கணபதிபாளையம்,கரைப்புதூர் ஊராட்சிகளில்,கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட தனிமனைகளை வரன்முறைப்படுத்தல் சிறப்பு முகாம் கணபதிபாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 120 மனுக்களுக்கு உரிய கட்டணம் செலுத்தியதை ஆய்வு செய்து அவர்களுக்கு வரன் முறை அனுமதி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன்,கணபதி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், கரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.ரவி, கணபதி பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துக்குமார், மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கணபதிபாளையம் பிரபு சங்கர், கரைப்புதூர் காந்திராஜ், வார்டு மெம்பர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×