search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasi Tamil Sangamam"

    • ஓசூரில் இருந்து காசிக்கு தமிழகத்தை சேர்ந்த தம்பதி ராஜன் - ராமலட்சுமி தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
    • காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தம்பதி பூரிப்புடன் தெரிவித்தனர்.

    வாரணாசி:

    உத்தரபிரதேசத்தின் காசியில் தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன், ஓசூரில் இருந்து காசிக்கு தமிழகத்தை சேர்ந்த தம்பதி ராஜன் - ராமலட்சுமி தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    ஓசூரில் இருந்து பயணத்தை தொடங்கி, இடையில் உணவுக்காகவும் எரிபொருளுக்காகவும் செலவிட்ட நேரத்தையும் சேர்த்து, 32 மணி நேரத்தில் 1,857 கி.மீ. தூரம் பயணம் செய்து காசியை அவர்கள் சென்றடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'இந்த பயணம் எங்களின் திருப்திக்காக மேற்கொள்ளப்பட்டது, சாதனை புத்தகத்தில் பதிவதற்காக அல்ல. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு பற்றி தமிழ்நாட்டில் இருக்கும்போது கூட எங்களால் இவ்வளவு விஷயங்களை தெரிந்துகொள்ள முடியவில்லை. இங்கே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறோம். காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்று பூரிப்புடன் தெரிவித்தனர்.

    கடந்த ஓராண்டாக மோட்டார் சைக்கிளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட இவர்கள் தற்போது நேபாளம் செல்ல திட்டமிட்டனர்.

    • காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை.
    • இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது.

    வாரணாசி:

    காசியில் நடந்துவரும் தமிழ் சங்கமம் நிகழ்வில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உத்தரபிரதேச மாநில மந்திரி சஞ்சீவ் கோண்ட் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப்பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரமாக உள்ளது. காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையைப் பேசுகிறார். பாரதியார் கவிதைகளை மேற்கோள்காட்டி பேசுகிறார். தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.

    இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இந்த உணர்வில் எப்போதும் ஒரு துளியும் குறைய கூடாது. இதுவே நமது வாழ்க்கையை பெருமைப்படுத்தும் என்பதை அடுத்த தலைமுறைக்கும் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நதிகள் இணைப்புத் திட்டத்தை பாரதியார் அப்போதே பாடியிருக்கிறார்.
    • காசியில் தமிழ் சங்கமத்தை நடத்தும் பிரதமரை கண்டு வியப்படைகிறேன்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும் போது கூறியதாவது: 

    காசியில் பாரதியார் 2 ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். காசியில் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை பாடுகையில், புலவர் பேச்சுக்களை காசியில் கேட்க கருவி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா முன்னேற்றம் அடையாத நேரத்தில் பாரதியார் இதை பாடியுள்ளார்.

    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்று நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அப்போதே பாரதியார் பாடியிருக்கிறார்.


    இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் கங்கையில் மூழ்கி எழும் போது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையை பரிசளித்த நிகழ்வு காசியில் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட பெருமை மிக்க காசி நகரில் தமிழ் சங்கமத்தை நடத்தும் எண்ணம் பிரதமருக்கு எப்படி வந்தது என்பதை கண்டு வியப்படைகிறேன்.

    தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி, காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற்றது. தமது குழுவினருடன் ஜனனே ஜனனே, ஓம் சிவோஹம் உள்ளிட்ட பாடல்களை அவர் பாடினார்.  பிரதமர் மோடி அந்த பாடல்களை ரசித்து கேட்டு மகிழ்ந்தார்.

    • ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது.
    • தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    வாரணாசி:

    காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சி, நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 16-ந் தேதிவரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது.

    காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான பல நூற்றாண்டு கால பழமையான நாகரீக தொடர்பை மீண்டும் உயர்ப்பிக்க இதில் கருத்தரங்குகள், கல்வி சார்ந்த உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2 ஆயிரத்து 592 பேர் பயணம் செய்கிறார்கள். முதலாவது ரெயில் நேற்று புறப்பட்டது.

    இந்தநிலையில், காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) முறைப்படி தொடங்கி வைக்கிறார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் தொடக்கவிழா நடக்கிறது.

    ×