என் மலர்
நீங்கள் தேடியது "kidnapped wife"
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (39). முருகன் மனைவி போதுமணியும் முருகவேல் மனைவி அபிராமியும் நட்பாக பழகி வந்தனர்.
இதனால் அபிராமி அடிக்கடி முருகன் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது முருகனுக்கும் அபிராமிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டு கடந்த 1 வருடத்துக்கு முன்பு 2 பேரும் வெளியூர் சென்று விட்டனர். அதன் பிறகு அவர்களை ஊருக்கு அழைத்து வந்த பெரியவர்கள் சமாதானம் செய்து அவரவர் குடும்பத்துடன் வாழுமாறு அறிவுரை கூறினர். ஆனால் முருகவேல் தனது மனைவியை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
அதன் பிறகு முருகனுக்கும், முருகவேலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் உன்னால்தான் என் குடும்பம் சீரழிந்து விட்டது என முருகனிடம் முருகவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனின் கழுத்தை அறுத்தார். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகவேலை கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள தருமத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மாமா மகள் சுதா (28) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
திருப்பூரில் வேலை பார்த்து வரும் ராஜேஷ்குமார் மாதத்துக்கு சில நாட்கள் மட்டும் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சுதாவுக்கும் அதே பகுதியில் சோப்பு கம்பெனி நடத்தி வந்த ராஜேஷ் என்ற வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் வீட்டுக்கு தெரியவரவே சுதாவை கண்டித்துள்ளனர்.
இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு சென்று விட்டனர்.
தனது மனைவியை கடத்திச் சென்று விட்டதாகவும், அவரை மீட்டுத் தர கோரி ராஜேஷ்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.






