search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kovilvazhi"

    • திருப்பூரில் தற்போது 3 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
    • தென் மாவட்டங்களுக்கு கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருப்பூர் :

    தென் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்கள் திருப்பூருக்கு பனியன் கம்பெனி உள்ளிட்ட தனியார் தொழில் நிறுவனங்களுக்கு வேலை தேடி வருகிறார்கள். இங்கு வேலை பார்ப்பவர்கள் மாதம் முதல் வாரத்தில் மட்டுமல்ல தினந்தோறும் சொந்த ஊர்களுக்கு போவதும் வருவதுமாக உள்ளனர். திருப்பூரில் தற்போது 3 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களுக்கு கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருப்பூரில் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டத் தொடங்கிய உடன் பஸ்கள் நிறுத்த போதிய வசதி இல்லாத காரணத்தால் திருப்பூர் பி. என்., ரோட்டில் புதிய பஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. அங்கே கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து உருவாக்கப்பட்டது. அதே போன்று தான் கோவில்வழி பஸ் நிலையம் அமைக்க ப்பட்டு தென் மாவட்டங்க ளுக்கு பஸ் வசதி செய்யப்ப ட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்கவும், பண்டிகை நாட்களில் ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கவுமே மாவட்ட நிர்வாகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவில்வழி பஸ் நிலையம் கூரை சீட் போடப்பட்டு தற்காலிக ஏற்பாடாகவே அமைக்கப்ப ட்டுள்ளது. இரவில் பயணிகள் அச்சமின்றி அமர போதிய மின் விளக்குகள் இல்லை. போதிய இருக்கைகளும் கிடையாது. மழை பெய்தால் ஒதுங்கி நிற்க வேறு இடமும் கிடையாது. வெயில் காலத்திலும் அமர முடியாது. தாராபுரம், பழனி, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் தான் அதிகளவில் வருகிறார்கள். போதிய குடிநீர் வசதியோ, மின் விளக்கு வசதியோ இல்லை. பேருக்கு ஒரு கழிவறை மட்டுமே உள்ளது . பஸ் நிலையத்திற்குள் இருட்டாக இருப்பதால் அதனை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் குடிப்பதும், தகாத செயல்களிலும் ஈடுபடுகிறா ர்கள். இதனால் பெண் பயணிகள் மட்டுமல்ல ஆண் பயணிகளும் எப்போது பஸ் வரும் என்று அவஸ்தையுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    மேலும் இது குறித்து தென் மாவட்ட பயணி ஒருவர் கூறுகையில்;- நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். விடுமுறை நாட்களில் ஊருக்கு செல்கிறேன். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்சுகள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை. இங்கு இரவில் போதிய மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் நிழற்குடையில் அமர முடிவதில்லை. கிடக்கும் ஓரிரு இருக்கைகளை போதை ஆசாமிகள் ஆக்கிரமித்து கொள்கிறார்கள். பஸ் வரும் வரை நிற்க வேண்டிய நிலை உள்ளது. பெரிதாக இங்கு கடைகளும் இல்லை. ஆகவே உணவு உள்ளிட்டவை பெரிதாக பயணிகளுக்கு கிடைப்பதில்லை. அரசு அறிவித்துள்ளது போல நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையத்தை விரைந்து அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×