search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kozhikondai flowers"

    • ஆண்டியூர், தும்பலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை சாகுபடியில் சில விவசாயிகள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.
    • தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி சாகுபடி பிரதானமாகவும், கோழிக்கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி சீசன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக ஆயுத பூஜை சீசனை இலக்காக வைத்து பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். பின்னர் முகூர்த்த சீசனில் குறைந்த பரப்பில் சாகுபடியாகிறது.முக்கோணம், பாப்பனூத்து, புங்கமுத்தூர், ஆண்டியூர், தும்பலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை சாகுபடியில் சில விவசாயிகள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.

    தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரமான பூக்கள் கிடைக்க மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடக்கிறது.தும்பலபட்டியில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்து வரும் முருகேசன் கூறியதாவது:-

    கடந்த 7 ஆண்டுகளாக கோழிக்கொண்டை பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். இப்பகுதியில் நாற்றுகள் கிடைப்பதில்லை. எனவே ஓசூர் சென்று நாற்று வாங்கி வந்து நடவு செய்தேன். ஏக்கருக்கு 40 ஆயிரம் நாற்றுகள் வரை பிடிக்கும். நடவு செய்த 2 மாதத்துக்கு பிறகு பூக்களை அறுவடை செய்யலாம்.தொடந்து நான்கு மாதங்கள் வரை குறிப்பிட்ட இடைவெளியில் பூக்கள் கிடைக்கும். சாகுபடியில் களைச்செடிகளை கட்டுப்படுத்த போராட வேண்டியுள்ளது. மக்காச்சோளம், உளுந்து பயிர் சாகுபடியில் களைக்கொல்லி தெளித்து கட்டு ப்படுத்துகின்றனர். ஆனால் இச்சாகுபடியில் மருந்து தெளிக்க முடியாது என்பதால் தொழிலாளர்களை கொண்டு களை பறிக்க வேண்டியுள்ளது.

    இதற்கு அதிக செலவாகிறது. சீதோஷ்ண நிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு ஒன்றரை டன் வரை, மகசூல் கிடைக்கும். முகூர்த்த சீசனில் கிலோ 70 - 80 ரூபாய் வரை கோழிக்கொண்டை பூ விற்பனையாகும். பிற நாட்களில் விலை கிடைக்காது.

    தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் கருகல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. கட்டுப்படுத்த மருந்து தெளித்து வருகிறோம். இத்தகைய சீசனில் தரமான பூக்கள் உற்பத்தி செய்ய சிரமப்பட வேண்டியுள்ளது.குறித்த நேரத்தில் பூக்களை பறித்தாலும், உடுமலையில் சந்தை வாய்ப்புகள் இல்லை. எனவே திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்களை விற்பனைக்காக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தினால் உடுமலை பகுதியில் பூக்கள் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மாலைகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
    • மாலை கட்ட கோழி கொண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

    திருப்பூர் :

    கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மாலைகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. மாலை கட்ட கோழி கொண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் கோழி கொண்டை பூக்களுக்கு விற்பனை இல்லாததால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.அதன்பின் நிலைமை சீரடைந்தது. தற்போது ரோஜா பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால் கோழி கொண்டை பூவிற்கான தேவைகுறைந்து விலை சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், கிலோ 60 ரூபாய்க்கு விற்ற கோழி கொண்டை 35 ரூபாயாக சரிந்து விட்டது. தற்பொழுது ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.ரோஜாவை வைத்து மாலை கட்டும் போது 3நாட்கள் வரை வாடாமல் இருக்கும். எனவே கோழிகொண்டைக்கான தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    ×