search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishekam at"

    • கும்பாபிஷேகம் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள திட்டமலை பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 26-ந் தேததி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணா குதி, வாஸ்து பூஜை திசா ஹோமம், 4 காலை யாக பூஜை, விக்னேஸ்வரா பூஜை, யாகசாலை ப்ரவேசம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது,

    அதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வாக மகா கும்பாபிஷேகம் விழா கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேல தாளங்களுடன் புனித நீரை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர உச்சியில் உள்ள கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மூல விநாயகர், பாலமுருகன், பெரிய நாயகி சமேத கைலாசநாதர் பெரு மானுக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    பின்னர் கற்பூர ஆராதனை காட்ட ப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை ேசர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
    • இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடை சின்னப்பை யன்புதூரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதியதாக தீர்த்த விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 சிலைகள் அமை ந்துள்ள கோவிலு க்கான கும்பாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத் துடன் தொடங்கியது.

    தொடந்து நேற்று 2 மற்றும் 3-ம்கால யாக பூஜைகள் நிறைவுற்ற இன்று அதிகாலை 4 மணி க்கு 4-ம்கால யாக பூஜைகள் நடந்தன.

    பின்னனர் அதிகாலை 5.30 மணிக்கு கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னர் 5.45 மணிக்கு மேல் செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதனையடுத்து தொட ர்ந்து தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வுகளும் அன்னதானமும் நடந்தன.

    இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் மற்றும் அமரபணீஸ்வரர் கோவிலில் கடந்த சில மாதங்களாக புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து 22-ந் தேதி கலசாபிஷேகமும், வாஸ்து சாந்தியும் நடைபெற்றன. 23-ந் தேதி யாக சாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    24-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணி அளவில் 5-ம் காலயாக பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

    முன்னதாக காலை 8 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு சிறப்பித்தார்.

    மேலும் கோபி, பாரியூர், நாயக்கன் காடு, வெள்ளாளபாளையம், கூகலூர், அழுக்குளி, குருமந்தூர், சவன்டபூர், வலையபாளையம், காசிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜை நடைபெற உள்ளது. மாலை 6 மணி அளவில் அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு டிரோன் மூலம் புனித கலச நீர் தெளிக்கப்பட்டது.

    ×