என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kumbakarai falls"
- கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.
- வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இது மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தத்தால் அருவிக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் குளித்து செல்கின்றனர். நேற்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.
அருவியில் குளித்து கொண்டிருந்தபோது அவர் கையில் வந்திருந்த 6.5 கிராம் தங்க மோதிரத்தை தண்ணீரில் தவறவிட்டார். இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து தாமோதரன் தவறவிட்ட மோதிரத்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜா சுற்றுலா பயணியான தாமோதரனை வரவழைத்து அவருடைய தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.
மோதிரம் காணாமல் போன ஒரேநாளில் அதனை மீட்டு கொடுத்த வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
- தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
- சுருளி அருவி யில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
இன்று 9-வது நாளாக நீர்வரத்து சீராகவில்லை. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவிக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி யில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் அதிக அளவில் வெள்ள ப்பெருக்கு இருந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். அருவிக்கு வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
- கொடைக்கானல், பெரியகுளம் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை குறைந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு கொடைக்கானல், பெரியகுளம் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனச்சரகர் அலுவலர் டேவிட்ராஜா தெரிவித்துள்ளார். நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும். அருவியில் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு குளிக்க சென்றனர். தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதேபோல் ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம், தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழைபெய்தது. இதனால் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியை எட்டியது. அணைக்கு 866 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. 52.36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 490 கன அடி நீர் வருகிறது.
மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. விரைவில் 55 அடியை எட்டும் பட்சத்தில் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 93 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.43 அடியாக உள்ளது. 47 கன அடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர் 10.2, உத்தமபாளையம் 1.3, சண்முகாநதி அணை 47, போடி 14.2, வீரபாண்டி 7.2, மஞ்சளாறு 42, ேசாத்துப்பாறை 55, பெரியகுளம் 85, வீரபாண்டி 5.4, ஆண்டிபட்டி 12.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தடைவிதித்தனர்.
- 9 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை யினர் தடைவிதித்தனர்.
தற்போது மழை குறைந்து சீரான நீர்வரத்து உள்ளது. இதனால் 9 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது காலாண்டு விடு முறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கும்பக்கரை வந்தனர்.
அவர்கள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறை யினர் நீர்வரத்தை கண்கா ணித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு அம்சங்க ளையும் மேம்படுத்தி வருகின்றனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.45 அடியாக உள்ளது. 509 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.62 அடியாக உள்ளது. 102 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.30 அடியாக உள்ளது. 46 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. விரைவில் முழுகொள்ள ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.70 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 25.4, தேக்கடி 26.2, கூடலூர் 0.8, சண்முகா நதி அணை 1, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 2, பெரி யகுளம் 3.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.- வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
- குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் நீண்ட நேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார த்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடை க்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை இல்லாததாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் அருவிக்கு குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது.
இந்நிலையில் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. இதனால் வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் நீண்ட நேரம் காத்திருந்து குளித்து சென்றனர். சிலர் அருவியின் மேல் பகுதியில் உள்ள தேங்கிய தண்ணீரில் குளித்து வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொண்டனர். மழை பெய்தால் மட்டுமே நீர்வரத்து இருக்கும். இந்த நிலை தொடர்ந்தால் 10 நாட்களில் அருவி வறண்டு போகும் அபாயம் உள்ளது
- அய்யப்ப சீசன் என்பதால் பக்தர்களின் வருகையும் சுருளி அருவிக்கு அதிகரித்துள்ளது.
- திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
ஆபத்தான குளியல்
தற்போது அய்யப்ப சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வட்டக்கானல் மற்றும் கொடைக்கானல் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
இதனால் கும்பக்கரை அருவியில் நேற்று மதியம் 1 மணி முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேலும் அருவியின் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த வனக்காவலர்கள் அருவிக்கு வரும் நீர் வரத்து அதிகரிப்பதை கண்டு அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் உடனடியாக வெளியே ற்றினர்.
இதனைத் தொடர்ந்து கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு வனத்துறையினர் தடை விதித்து அருவியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளைப்பெருக்கை பார்ப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் சுற்றுலா பயணிகளின் மிகுந்த ஆர்வத்தினால் அருவிக்கு மேல் நீர் தேங்கி செல்லும் பகுதியில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் குளித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது ஆபத்தானது என்பதால் விபரீதம் உணராமல் விளையாடும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து வரத்தொடங்கி உள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக உள்ளது. வரத்து 270 கன அடியாகவும், திறப்பு 52 கன அடியாகவும் உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 36.61 அடியாக உள்ளது. வரத்து 6 கன அடியாகவும், திறப்பு 60 கன அடியாகவும் உள்ளது. மஞ்சளாறு நீர்மட்டம் 41 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.
பெரியாறு 3.4, தேக்கடி 2.8, கூடலூர் 1.5, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 18, வைகை அணை 5.4, மஞ்சளாறு 4, மருதாநதி 22, கொடைக்கானல் 28.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் 26 கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தொடர் மழை காரணமாக கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்