என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீர்வரத்து சீரானதால் 9 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
- வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தடைவிதித்தனர்.
- 9 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை யினர் தடைவிதித்தனர்.
தற்போது மழை குறைந்து சீரான நீர்வரத்து உள்ளது. இதனால் 9 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது காலாண்டு விடு முறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கும்பக்கரை வந்தனர்.
அவர்கள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறை யினர் நீர்வரத்தை கண்கா ணித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு அம்சங்க ளையும் மேம்படுத்தி வருகின்றனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.45 அடியாக உள்ளது. 509 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.62 அடியாக உள்ளது. 102 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.30 அடியாக உள்ளது. 46 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. விரைவில் முழுகொள்ள ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.70 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 25.4, தேக்கடி 26.2, கூடலூர் 0.8, சண்முகா நதி அணை 1, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 2, பெரி யகுளம் 3.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்