search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laborer arrested for"

    • தொழிலாளி செல்வன் மாதம்மாளையும், செல்வனையும் அரிவாளால் வெட்டினார்.
    • இதில் கணவன்-மனைவி 2 பேரும் காயம் அடைந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 45). கூலி தொழிலாளி. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (60). தொழிலாளி. இவருக்கும், மாதம்மாளுக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாதம்மாளும், கூகலூரை சேர்ந்த அவருடைய 2-வது கணவர் செல்வன் (36) என்பவரும் பொலவக்காளி பாளையம் வந்தனர்.

    அப்போது மது போதையில் இருந்த தொழிலாளி செல்வனுக்கும், மாதம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளி செல்வன் மாதம்மாளையும், செல்வனையும் அரிவாளால் வெட்டினார்.

    இதில் கணவன்-மனைவி 2 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து செல்வன் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார்.

    இதை தொடர்ந்து காயம் அடைந்த மாதம்மாள், செல்வன் ஆகிய 2 பேரும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான செல்வனை தேடி வந்தனர். இந்த நிலையில் கணவன்- மனைவியை அரிவாளால் வெட்டிய செல்வனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெங்கிடுசாமி வீட்டிற்கு வந்து மர பீரோவைத்திறந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை.
    • இதில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்ட தம்பி வீரனை போலீசார் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே ஊஞ்சபாளையம் மேக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கிடுசாமி (75). இவரது தோட்டத்து அருகே சுப்பிரமணியம் என்பவரது தோட்டத்திற்கு கூலி வேலைக்கு வந்தவர் ஊஞ்சபாளையம் காலனியை சேர்ந்த நவீன் என்கிற தம்பி வீரன் (28).

    இவர் சம்பவத்தன்று சுப்பிரமணியம் தோட்டத்திற்கு வேலைக்கு வந்து விட்டு அருகில் இருந்த வெங்கிடுசாமி என்பவரிடம் தனது மோட்டார் சைக்கிளை அடமானம் வைத்துள்ளேன்.

    அதை மீட்க ரூ.5 ஆயிரம்தேவைப்படுகிறது. எனவே ரூ.5 ஆயிரம் கடன் கொடுங்கள் மீண்டும் கொடுத்து விடுகிறேன் என கேட்டுள்ளார்.

    அதற்கு வெங்கடசாமி இல்லை என கூறிவிட்டு தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை அங்குள்ள ஒரு மறைவிடத்தில் வைத்து விட்டு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட நவீன் என்கிற தம்பி வீரன் வெங்கிடுசாமி வெளியே சென்ற பிறகு அங்கிருந்து சாவியை எடுத்து பூட்டை திறந்து வீட்டில் இருந்த மர பீரோவில் வெங்கிடுசாமி வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு மீண்டும் வீட்டை பூட்டி சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு சென்று விட்டார்.

    பின்னர் மாலை வெங்கிடுசாமி வீட்டிற்கு வந்து மர பீரோவைத்திறந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை. விசாரித்ததில் தம்பி வீரன் என்பவர் வீட்டில் இருந்து வெளியே சென்றதாகவும், அவரை விசாரித்தால் தெரியும் எனவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

    இதனையடுத்து நவீன் என்கிற தம்பி வீரன் தலைமறைவானார்.

    இதனையடுத்த அருகில் இருக்கும் ஒரு விவசாய கரும்பு தோட்டத்திற்கு தம்பி வீரன் வேலைக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததும் வெங்கிடுசாமி அவரை கையும், களவுமாக பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தார்.

    இதில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்ட தம்பி வீரனை போலீசார் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    ×