search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lal Bahadur Shastri"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபாகர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
    • இவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அதில் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா, முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், முன்னாள் முதல் மந்திரி அசோக் சவான் உள்ளிட்ட பலரும் அடங்குவர்.

    இதற்கிடையே, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரனான விபாகர் சாஸ்திரியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய விபாகர் சாஸ்திரி, உத்தர பிரதேச துணை முதல் மந்திரி பிரஜேஷ் பதக் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைந்தார்.

    • ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் விபத்தில் சிக்கின.
    • இந்த கோர விபத்தில் சிக்கி 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலகவேண்டும் என்றார் தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், லால் பகதூர் சாஸ்திரி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ஒரு விபத்து நடந்து, அது மீண்டும் நடந்தது. அதன்பிறகு, ராஜினாமா செய்யும் முடிவை ஜவகர்லால் நேரு எதிர்த்தார். ஆனால் அதற்கு எனது தார்மீக பொறுப்பு என்று சாஸ்திரி கூறிவிட்டு ராஜினாமா செய்துள்ளார். இதேபோன்ற சம்பவத்தை நாடு எதிர்கொள்கிறது, அரசியல்வாதிகள் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    அரசுமுறை பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் வந்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தாஷ்கென்ட் நகரில் மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்தினார்.
    தாஷ்கென்ட்:

    மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்த பயணத்தின் நிறைவுகட்டமாக நேற்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் அஜிஸ் காமிலோவ் மலர்கொத்து அளித்து அன்புடன் வரவேற்றார்.

    பல்வேறு துறைகளில் இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் உயரதிகாரிகள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ்-ஐ சுஷ்மா சந்தித்து பேசினார்.

    சுதந்திர போராட்ட தியாகியும் இந்தியாவின் இரண்டாவது பிரதமருமான லால் பகதூர் சாஸ்திரி இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் செய்வதற்காக கடந்த 1966-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தான் தலைநகரான தாஷ்கென்ட் நகருக்கு வந்திருந்தார்.

    10-1-1966 அன்று வரலாற்று சிறப்புமிக்க இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. அதற்கு மறுநாள் 11-1-1966 அன்று லால் பகதூர் சாஸ்திரி(61) மாரடைப்பால் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும், அவரது மரணம் இயற்கையானது அல்ல, அமெரிக்க உளவுத்துறையின் கைவரிசையாக இருக்கலாம் என அப்போது பரவலாக ஒரு கருத்து நிலவியது.


    மறைந்த லால் பகதூர் சாஸ்திரிக்கு அவரது உயிர் பிரிந்த தாஷ்கென்ட் நகரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்துக்கு இன்று சென்ற மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், லால் பகதூர் சாஸ்திரியின் மார்பளவு சிலைக்கு மலர்வளையம் சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார்.

    அந்த சிலையை வடிவமைத்த சிற்பி யாக்கோவ் ஷப்பிரி என்பவர் சுஷ்மாவுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
    மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவரது மகன் கோரிக்கை வைத்துள்ளார். #LalBahadurShastri #AnilShastri
    சண்டிகார்:

    மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பற்றி எழுதப்பட்ட ‘லால்பகதூர் சாஸ்திரி: லெசன்ஸ் இன் லீடர்சிப்’ என்னும் ஆங்கிலப்புத்தகம், பஞ்சாபி மொழியில் நேற்று வெளியிடப்பட்டது. சண்டிகாரில் நடந்த இதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லால்பகதூர் சாஸ்திரியின் மகனும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அனில் சாஸ்திரி கூறியதாவது:-

    எனது தந்தையின் மர்ம மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவருடைய மகன் என்கிற முறையில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதுபற்றி ஆய்வு செய்ய 1977-ம் ஆண்டு ராஜ்நாரயண் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையையும் மத்திய அரசு வெளியிடும்படி வேண்டுகிறேன். பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த கோரிக்கையை வைத்தது. ஆனாலும் அவர்கள் பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதைச் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேருவின் மறைவுக்கு பிறகு பிரதமராக பதவி வகித்தவர் லால்பகதூர் சாஸ்திரி, 1966-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி சோவியத் ரஷியாவில், பாகிஸ்தானுடன் தாஷ்கண்ட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். தாஷ்கண்ட் நகரில் தங்கியிருந்தபோது மறுநாள் திடீரென மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பில் இறந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அவருடைய குடும்பத்தினர் இதில் அமெரிக்காவின் சதிவேலை இருக்கலாம் என்று குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.  #LalBahadurShastri #AnilShastri
    லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பான ஆவணங்கள் எங்கே? என மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு தற்போது பிரதமர் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார். #LalBahadurShastri #Death #Records
    புதுடெல்லி:

    இந்தியாவின் 2-வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கடந்த 1966-ம் ஆண்டு அப்போதைய சோவியத் ரஷியாவுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள தாஷ்கண்ட் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். பாகிஸ்தானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட சில மணி நேரங்களில் இந்த சோகம் நிகழ்ந்தது.

    லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 1977-ல் ராஜ் நரேன் கமிட்டி அமைக்கப்பட்டது. ஜனதா கட்சியின் ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை.

    இந்த அறிக்கை தொடர்பான ஆவணங்கள் எங்கே? என மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு தற்போது பிரதமர் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுக்கும் கடிதம் எழுதியுள்ள அவர், நரேன் கமிட்டி அறிக்கை தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுமாறு வலியுறுத்தி உள்ளார்.

    தங்களுக்கு பிரியமான தலைவரின் மரணத்துக்கு பின்னால் உள்ள உண்மைகளை அறிய மக்கள் விரும்புவதாக ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறியுள்ளார்.  #LalBahadurShastri #Death #Records
    ×