search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leafhopper disease"

    • பருத்தியை தாக்கும் நோயால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • கோடை காலத்தில் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை இல்லததால் நெல் விவசாயம் பாதிக்கப் பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் பருத்தி விவசாயத்தில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். காலையில் பனிபொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து ள்ளதால் பருத்தியில் இலை சுருட்டு புழு தாக்குதல் உள்ளது.

    அபிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதியான அச்சங்குளம். தீர்த்தாண்ட தானம் வல்லகுளம் டி.புன வாசல் பள்ளபச்சேரி. அகத்தாரிருப்பு பாப்பனம் பொட்டகுளம் முத்தனேரி வேப்பங்குறிச்சி விரதக்கு ளம் உடைய நாதபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்து ள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய் குளங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர் பருத்தி செடிகளை பொருத்தவரை லேசான ஈரப்பதத்திலும் கடும் வறட்சி நேரத்தில் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இதனால் கோடை சாகுபடியாக பருத்த சாகுபடி செய்வதில் அபிராமம் பகுதி விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வந்தாலும் இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாததால் வெயில் கொடுமை அதிகரி த்ததாலும் அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் பருத்தியை நோய் தாக்கி வருகிறது.

    குறிப்பாக இலை சுருட்டு புழு நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன் பருத்தியில் இலை சுருட்டு புழு தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×