search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Legidlative Speaker Appavu"

    • திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • 1999 ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி அனுமின் நிலையத்தில் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆள்கள் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த தேர்வை ரத்துசெய்ய கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மறறும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த எழுத்துத் தேர்வு நாளை நடக்க உள்ளதாக, அணுமின் நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கூடங்குளத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில், 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நாளை நடக்க உள்ள எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்யாவிடில், தேர்வு நடைபெறும் அணுமின் நிலைய வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நாளை முற்றுகை போராட்டம் அறிவித்ததை அடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காமராஜர் புகைப்படத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், வி.திரவியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
    • தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி புதிய கட்டிடத்தை அர்ச்சித்தார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் காமராஜ் நடுநிலை ப்பள்ளியின் புதிய கட்டிடம் திறப்பு விழா, பள்ளி ஆண்டு விழா, பழைய மாணவர்கள் கூடுகை விழா ஆகிய முப்பெரும் விழா தெற்கு கள்ளிகுளம் காமராஜ் நடுநிலை ப்பள்ளியில் நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு விழாவிற்கு தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக பள்ளிக்கு வந்த சபா நாயகரை பள்ளி தாளாளர் மருத்துவர் மி.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பள்ளி ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் வரவேற்றனர்.

    பள்ளியில் அமைக்கப்ப ட்டிருந்த காமராஜர் புகைப்படத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், பள்ளியின் முன்னாள் மாணவர் வி. திரவியம் ஆகியோர் திறந்து வைத்தனர். டி.டி.என்/ கல்வி குழும தலைவர் டி.டி.என். லாரன்ஸ் குத்து விளக்கேற்றினார்.

    புதிய கட்டிடம்

    தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி புதிய கட்டிடத்தை அர்ச்சித்தார். பள்ளி தலைமை ஆசிரியை லெற்றீசியா வரவேற்று பேசினார். விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மி. ஜோசப் பெல்சி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜ் குமார், துரைகுடியிருப்பு பங்குத்தந்தை ஆலிபன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பி னர் பாஸ்கர், கள்ளிகுளம் மருத்துவ அலுவலர் ஜெயம் டெல்சி, கள்ளிகுளம் பஞ்சாயத்து துணைத்தலைவர் கமலம், வார்டு உறுப்பினர் லிங்கம், செயலர் சுமிலா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சமூகை முரளி, வள்ளியூர் வணிகர் நல சங்க செயலாளர் முல்லை. கவின் வேந்தன், பம்பாய் களிகை சங்க துணைத்தலைவர் சேவியர் ஆல்வின் மற்றும் உறுப்பினர் அருள் ரவி, முன்னாள் மாணவியும் சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையு மான பாக்கிய லெட்சுமி, கள்ளிகுளம் அலோசியஸ் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வேளாங்கண்ணி, பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை தங்கஜோதி, பள்ளி கட்டிட ஒப்பந்தக்காரர்கள் புனிதன், கவுதம், சண்முகசுந்தரம், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவ -மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், கல்வி பரிசு வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தாவும், காமராஜ் பள்ளி தாளாளருமான மருத்துவர் மி. ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரிய, ஆசிரியைகள், முன்னாள் மாணவர் சங்க உறுப்பி னர்கள் நிமலேஷ், மணி கண்டன், பனிமாதா பேரா லய நிர்வாகிகள் மற்றும் மாணவ- மாணவிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×