search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Life Insurance"

    • ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீது மத்திய அரசு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது
    • நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இந்த வரி விதிப்பை தளர்த்த கோரிக்கை விடுத்துள்ளார்

    ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியங்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வாரியானது மக்கள் விரோத வரி என்று மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

     

    இதுகுறித்து மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இது முற்றிலும் மக்கள் விரோதமானது, உயிர்க் காப்பீடு திட்டங்களின் விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வாரியானது சாமானிய மக்களுக்கு சுமையாக அமையும். மேலும் இது அவர்களிடையே அச்சத்தை விளைவிக்கும்.

    இது புதிதாக யாரும் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டடத்தில் சேர முடியாத நிலையை ஏற்படுத்தும். அவர்களின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை இந்த வரி விதிப்பானது தகர்க்கும். எனவே என்ன விலை கொடுத்தும் இந்த வரியை உடனே ரத்து செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சரே இந்த வரி விதிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தது பேசுபொருளானதையும் பார்க்க வேண்டி உள்ளது.  இதற்கிடையில் நேற்று  மக்களவையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் இருந்து  காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிரித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

     

     

    ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையுடன் பயனர்களுக்கு உயிர் காப்பீடு திட்டம் சேர்த்து வழங்கப்படுகிறது. #Airtel



    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் சலுகைகளை அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது. கடந்த வாரம் ரூ.299 விலையில் பிரீபெயிட் சலுகையுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சலுகையை ஏர்டெல் அறிவித்தது. அந்த வகையில் தற்சமயம் ரூ.129 மற்றும் ரூ.249 விலைகளில் இரண்டு சலுகைகளை அறிவித்துள்ளது.

    இதில் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.249 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

    இத்துடன் தனியார் வங்கி நிறுவனம் சார்பில் ரூ.4 லட்சத்திற்கான உயிர்காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஏர்டெல் டி.வி. பிரீமியம் சேவையும் வழங்கப்படுகிறது. இதில் ஜீ5, HOOQ, நேரலை சேனல்கள், திரைப்படங்களை பார்க்கும் வசதியும் ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.



    வாடிக்கையாளர்கள் ரூ.249 சலுகையை தேர்வு செய்யும் போது காப்பீடு திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், காப்பீடு திட்ட விவரங்களை ஏர்டெல் செயலியில் இருந்து இயக்க முடியும்.

    இத்துடன் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.129 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஏர்டெல் டி.வி. மற்றும் வின்க் மியூசிக் சேவைக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
    ×