search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loan special camp"

    • நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • ஆதார் அட்டை, ஜாதிச்சான்றிதழ், வருமானச்சான்று நகல், தொழில்திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள் சார்பில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினர், சிறுபான்மை சமூகத்தினருக்கு வங்கி கடன் வழங்க நாளை (28-ந் தேதி) 7 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் பிற்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகங்கள் சார்பில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மை சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டுக்கு தனி நபர் கடன், குழுகடன், கறவை மாட்டு கடன், சிறு குறு விவசாயிகளுக்கு நீர் பாசன கடன், கைவினைஞர்களுக்கு தொழில்கடன், கல்விக்கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன.

    இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க தேனி அல்லிநகரம், போடி ஆகிய இடங்களில் செயல்படும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கி, ஆண்டிபட்டி, ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    கடன் உதவி பெற விரும்பும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களது ஆதார் அட்டை, ஜாதிச்சான்றிதழ், வருமானச்சான்று நகல், தொழில்திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    ரூ.25 ஆயிரத்துக்கு உள்பட்டு கடன் பெறுவதற்கு கூட்டுறவு சங்க உறுப்பினர் ஒருவரும், ரூ.50 ஆயிரத்துக்கு உள்பட்டு கடன் பெறுவதற்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 2 பேரும் பிணை கையொப்பமிட வேண்டும். ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெறுவதற்கு கடன் தொகைக்கு இணையாக இரு மடங்கு சொத்து அடமானம் சமர்ப்பிக்க வேண்டும்.


    கல்விக்கடன் பெறுவதற்கு கல்வி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி உண்மைச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • 2022-23 ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த சிறுபான்மையினருக்கு சுமாா் ரூ.1.55 கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் சிறுபான்மையினா் கடன் பெற வரும் வருகிற 18-ந் தேதி முதல் ஜூலை 22ந்தேதி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் 2022- 23 ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த சிறுபான்மையினருக்கு சுமாா் ரூ.1.55 கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த முகாமானது திருப்பூா் வடக்கு வட்டத்தில், திருப்பூா் நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 ந் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரையும், திருப்பூா் தெற்கு வட்டத்தில், திருப்பூா் நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 ந் தேதி பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையிலும், அவிநாசி வட்டத்தில், பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜூலை 19 ந் தேதி காலையிலும், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜூலை 19 ந்தேதி பிற்பகலிலும் முகாம் நடைபெறுகிறது.

    பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் காங்கயம் கிளை, தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் ஜூலை 20ந்தேதி காலையில் முகாம் நடைபெறுகிறது. உடுமலை வட்டத்தில், உடுமலை நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 22 ந் தேதி காலையில் முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
    • நாளை(24-ந்தேதி) நடைபெறும் கடன் மேளாவில் பொதுக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 80 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன், மத்தியகால விவசாயம் சார்ந்த கடன், நகைக்கடன், சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், விதவைகள் கடன், டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பொதுமக்கள் அனைவரும் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நாளை(24-ந்தேதி) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

    கடன் மேளா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு அனைத்து வகையான விண்ணப்பங்கள் மற்றும் கடன்களை பெற்று பயனடையலாம் என தேனி மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    ×