என் மலர்
நீங்கள் தேடியது "Local body representatives"
- இணையதள பயிற்சி ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
- 2 நாட்கள் நடைபெற்ற இணையதள பயிற்சியில் ஒன்றியக்குழு தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
சென்னையில் இருந்து ஊரக உள்ளாட்சித்துறை அலுவலகம் மூலமாக காணொலியில் கிராம ஊராட்சி செயல்படுத்தும் பிரிவுகள், வளர்ச்சிகள், இலக்குகள் தொடர்பான இணையதள பயிற்சி ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு 2 நாட்கள் நடைபெற்ற இணையதள பயிற்சியில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றியக்குழு தலைவர் பொன் முத்தையா பாண்டியன், துணைத் தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலை வர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






