என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lokayukta bill"
- ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து அனைவரது பார்வையையும் பெற்றவர் அன்னா ஹசாரே.
- லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் என்றால் மிகையாகாது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி பா.ஜனதா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சபை ஒன்று. மற்றொரு மேல்சபை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டசபையில் ஏற்கனவே லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் நேற்று மேல்சபையில் இந்த மசோதா நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக போராடியவருமான அன்னா ஹசாராவை போன் மூலம் தொடர்பு கொண்டு, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
லோக் ஆயுக்தா வரம்பிற்குள் முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் அடங்குவர். லோக் ஆயுக்தா அதிகாரி ஒருவரை நியமித்தபின் அவரை மாற்றவோ இடமாற்றமோ செய்ய முடியது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் நீக்க முடியும்.
அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குறித்த புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
மத்திய அரசு லோக் ஆயுக்தா மசோதாவை அமல்படுத்த அன்னா ஹசாரே நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை இழக்க இவரது போராட்டம் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும், இவருடன் உண்ணாவிரதம் இருந்து கெஜ்ரிவால் தனியாக சென்று கட்சி ஆரம்பித்து டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் கெஜ்ரிவாலிடம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
கொல்கத்தா:
அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் மீதான ஊழல் புகார்களை விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்க உதவும் லோக் ஆயுக்தா சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
லோக் ஆயுக்தா சட்டம் சில மாநிலங்களில் உள்ளன. ஆனால் 12 மாநிலங்களில் அந்த சட்டத்தை நிறைவேற்றாமல் இருந்தது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய கோர்ட்டு, லோக் ஆயுக்தா விசாரணை நீதிமன்றங்களை அமைக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. சமீபத்தில் தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் மேற்கு வங்காளம் சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதற்கான மசோதாவை முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தாக்கல் செய்து பேசினார். இதையடுத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று வழக்கம் போல் காலை 10 மணிக்கு சபை கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும், 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
அவர் உரையாற்றி முடிந்ததும் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்து பேசினார். அப்போது சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கினார். இதையடுத்து சட்ட மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது.
ஊழலுக்கு எதிரான மசோதா இது என்பதால், எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்கும் என்பதால் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokayuktaBill
தமிழகத்தில் லோக் ஆயுக்தா என்ற விசாரணை அமைப்பைக் கொண்டு வருவதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு 9-ந் தேதி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா என்ற விசாரணை அமைப்பை உருவாக்குவது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கெடு விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
லோக் ஆயுக்தா, லோக்பால் தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னர், லோக் ஆயுக்தாவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு வைத்த வாதத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
எனவே லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தற்போது தமிழக சட்டசபை நடைபெற்று வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் என்று அரசு வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த மசோதா தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த மசோதாவை நாளை (4-ந் தேதி) தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், பின்னர் சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான 9-ந் தேதியன்று அதை விவாதத்தின் மூலம் அரசு நிறைவேற்றவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #LokayuktaBill #TNAssembly
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்