என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "LS Poll Result"
- 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது.
- இந்த முறை 238 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 தொகுதிளுக்கு மேல் பிடிக்கும் என கணிக்கப்பட்டது.
ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் பாஜக-வுக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களில் பலத்த அடி விழுந்துள்ளது.
இதனால் மத்தியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னணியில் உள்ளது. இப்படியே கடைசி சுற்று வரை சென்றால் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த முறை பாஜக 303 தொகுதியில் தனித்து வெற்றி பெற்றிருந்தது. தற்போது 241 தொகுகளில்தான் முன்னணி பெற்றுள்ளது. இது பாஜக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (14) ஆகியவை பா.ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.
அதேவேளையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 50 இடங்களை கூட தாண்டாது என பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.
ஆனால் காங்கிரஸ் 99 இடங்களில் தற்போது முன்னிலை வகிக்கிறது. கடந்த முறையை விட தற்போது இரண்டு மடங்கு இடங்களில் வெற்றி பெறும் சூழ்நில உருவாகியுள்ளது.
- நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன.
- தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபகள் (ஜி.எம். அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரிந்தாமன், பி.ஆரம். சிவகுமார், சி.டி. செல்வம், எஸ். விமலா) ஆறு பேர், பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் என ஏழு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால், ஜனாதிபதியின் தோள்களில் கடுமையான சுமைகள் சுமத்தப்படும். தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். தேர்தலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த எந்த கூட்டணி அதிக இடங்களை பிடிக்கிறதோ, அந்த கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இது குதிரை பேரம் நடப்பதை தடுக்கும். இதை ஜனதிபதி செய்வார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கடந்த வாரங்களில் நடைபெற்ற பல சம்பவங்கள் பல விசயங்களை உருவாக்கியுள்ளன. அதன் காரணமாக தேர்தல் முடிவுகள் போது வன்முறையில் முடியலாம். இவை பெரும்பான்மையான நம் மக்களின் மனதில் உள்ள உண்மையான அச்சங்கள். புகழ்பெற்ற நபர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களும் இதே அச்சத்தை எதிரொலித்துள்ளனர்
ஆளுங்கட்சி தலைவர்கள் சிறுபான்மையினர் மற்றும் எதிர்கட்கட்சி தலைவருக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை பேசிய போதிலும், தேர்தல் கமிஷன் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகப்பெரிய கவலை அளிக்கிறது.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இறுதி அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். எந்தவொரு சாத்தியமான பேரழிவைத் தடுக்க அல்லது முடிவுகளை எண்ணும் மற்றும் அறிவிக்கும்போது எழக்கூடிய ஏதேனும் பயங்கரமான சூழ்நிலைகளைத் தடுக்க முனைப்புடன் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்க வேண்டும்.
இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசின் குடிமக்களாகிய இந்திய மக்களாகிய நாங்கள், தற்போது நடைபெற்று வரும் கோடை விடுமுறையின் போதும், உச்ச நீதிமன்றத்தின் முதல் ஐந்து மதிப்புமிக்க நீதிபதிகளின் வருகையையும், வருகையையும் உறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் எழக்கூடிய அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டால் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும்
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்