search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai High Court question"

    • நீதிமன்றம் உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன்? ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    • விவசாயிகளின் நலன் கருதி, வேளாங்குளம் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரை அய்யர்பங்க ளாவைச் சேர்ந்த கோவிந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறேன். மதுரை ஐகோர்ட்டில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளேன்.

    எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வேளாங்குளம் ஆகும். மழையை நம்பித்தான் இந்த பகுதி விவசாயிகள் உள்ளனர். வேளாங்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் அனைத்தும் கருவேல மரங்களால் ஆக்கிரமித்து ள்ளன. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் இந்த கண்மாய்க்கு வருவது தடைபட்டுள்ளது.

    இங்குள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் விவசாயிகளின் நலன் கருதி, வேளாங்குளம் கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் தூர்வாரி தடையின்றி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

    இதே போல, பெரிய கோட்டையில் இருந்து முத்தனேந்தல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விலக்கில் இருந்து சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்குளம் வழியாக வேலூர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது.

    இதை சீரமைக்க பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இன்னும் சில மாதங்களில் வேளாங்குளம் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.

    இங்குள்ள சாலையை சீரமைத்து போக்குவரத்திற்கு வசதி செய்து தரும்படியும், கண்மாய் மற்றும் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியிருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    எங்கள் மனுவின் அடிப்படையில் வேளா ங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சி.எம். ஆறுமுகம் ஆஜராகி, வேலாங்குளம் கிராமத்தினரின் வாழ்வா தாரம் விவசாயத்தை நம்பித்தான் உள்ளது. அதற்கு ஆதாரமாக உள்ள கண்மாய் வரத்து கால்வாய்களை தூர் வாருவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேளாங்குளம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை சாலை சீரமை க்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    பின்னர் நீதிபதிகள், சாலையை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கேள்வி எழுப்பினர்.

    பின்னர் இது தொடர்பாக மனுதாரர் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். வேளாங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரவும், சாலையை சீரமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    ×