என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Maharashtra Tea Seller"
- தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது.
- வியாபாரத்தில் அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உதவி செய்கிறார்கள்.
மகாராஷ்டிராவை சேர்ந்த 5 ரூபாய் டீ வியாபாரி ஒருவர் தனது புதுமையான அணுகுமுறையால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தாராஷிவ் பகுதியை சேர்ந்தவர் மகாதேவ் நானாமாலி. 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கடந்த 20 ஆண்டுகளாக டீ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமான தள்ளுவண்டியில் டீ வியாபாரம் செய்பவராக அல்லாமல் இவர் தனது கிராமத்தை சுற்றி வசிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தொலைபேசி மூலம் ஆர்டர்களை எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் வழங்குகிறார்.
இதனால் தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உதவி செய்கிறார்கள். தினமும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு சென்று டீ வியாபாரம் செய்யும் இவர் நாள்தோறும் 2 ஆயிரம் கப் டீ வரை விற்பனை செய்கிறார். இதன் மூலம் தினசரி வருமானமாக ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கிடைப்பதால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இவரை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.