search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Tea Seller
    X

    புதுமையான அணுகுமுறையால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் டீ வியாபாரி

    • தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது.
    • வியாபாரத்தில் அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உதவி செய்கிறார்கள்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த 5 ரூபாய் டீ வியாபாரி ஒருவர் தனது புதுமையான அணுகுமுறையால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தாராஷிவ் பகுதியை சேர்ந்தவர் மகாதேவ் நானாமாலி. 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கடந்த 20 ஆண்டுகளாக டீ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமான தள்ளுவண்டியில் டீ வியாபாரம் செய்பவராக அல்லாமல் இவர் தனது கிராமத்தை சுற்றி வசிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தொலைபேசி மூலம் ஆர்டர்களை எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் வழங்குகிறார்.

    இதனால் தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உதவி செய்கிறார்கள். தினமும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு சென்று டீ வியாபாரம் செய்யும் இவர் நாள்தோறும் 2 ஆயிரம் கப் டீ வரை விற்பனை செய்கிறார். இதன் மூலம் தினசரி வருமானமாக ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கிடைப்பதால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இவரை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×