என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Man arrested for"
- கேரளாவிற்கு கூலித்தொழி லாளர்களை ஜீப்பில் ஏற்றி செல்லும் செந்தில்குமார் பகலில் நோட்ட மிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக வைத்து ள்ளார்.
- பகல் நேரத்தில் டிரைவராகவும் இரவில் தான் திருடுவதற்காக தேர்ந்தெடுத்த வீடு , நிறுவனங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (33). இவர் கூடலூரிலிருந்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் கூலித்தொழி லாளர்களை ஏற்றி செல்லும் ஜீப் டிரைவராக உள்ளார். இந்நிலையில் குமுளி ஸ்பிரிங் வேலி என்ற இடத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. அங்கு வைத்திருந்த 205 லிட்டர் டீசல் திருடு போனது.
இதுகுறித்து குமுளி போலீஸ் நிலைய த்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோபின் ஆண்டனி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி னார். அப்போது டீசலை திருடியது செந்தில்கு மார் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தெரி விக்கையில், கேரளாவிற்கு கூலித்தொழி லாளர்களை ஜீப்பில் ஏற்றி செல்லும் செந்தில்குமார் பகலில் நோட்ட மிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக வைத்து ள்ளார்.
பகல் நேரத்தில் டிரைவராகவும் இரவில் தான் திருடுவதற்காக தேர்ந்தெடுத்த வீடு , நிறுவனங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவர் மீது குமுளி, வண்டி பெரியாறு, கம்பம் மெட்டு, கட்டப்பணை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது என்றனர்.
- பெரியசாமி வெள்ளையனிடம் எனது கூலி பணமும், தங்கை கூலி பணமும் கேட்டுள்ளார்.
- பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்து, கை உட்பட பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
பவானி:
நாமக்கல் மாவட்டம் வளையக்காரன் பாளையம் தட்டான் குட்டை பகுதியில் வசிப்பவர் பெரியசாமி (வயது 40). கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் லேத்து வேலை மற்றும் கட்டிட வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பெரிய சாமி மற்றும் அவரின் சகோதரி தனலட்சுமி ஆகிய இருவரும் வடிவேல் என்ற வெள்ளையன் என்பவரு டன் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
செய்த வேலைக்கு பெரிய சாமி பணம் கேட்டுள்ளார். இந்நிலையில் வெள்ளையன் நீ மீண்டும் என்னிடம் வேலைக்கு வந்தால் தான் பணம் கொடுக்க முடியும் என கூறினார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அருந்திய இருவரும் அருகில் இருந்த கோவிலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மீண்டும் பெரியசாமி வெள்ளையனிடம் எனது கூலி பணமும், தங்கை கூலி பணமும் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த வெள்ளையன் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்து, கை உட்பட பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
இதையடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த பெரி யசாமியை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு பவானி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பெரியசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெருந்து றை யில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்த னர்.
இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீ சார் விசா ரணை மேற்கொ ண்டு வடிவேல் என்ற வெள்ளை யனை கைது செய்து பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்