என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "manakula vinayagar temple"
- விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
- மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி திதியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். அதன்டி இன்று அனைத்து விநாயகர் கோவில்களிலும் மஹா சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
கோவிலில் வெளி பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கூட்ட நெரிச்சலை தவிர்க்க மூலவருக்கு அர்ச்சனை செய்யாமல் உற்சவருக்கு மட்டும் வெளியே அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு இடைவிடாத அன்னதானம் வழங்கப்படட்டது.
ஜப்பான் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஆன்மீக குழுவினர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வருவர். 25 பேர் கொண்ட ஜப்பான் நாட்டு ஆன்மீக குழுவினர் விநாயகர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் மணக்குள விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
ஜப்பான் நாட்டு குழுவினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்யப்பட்டது.
- அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலை முன்னே செல்ல பக்தர்கள் பின் தொடர்ந்து பாத யாத்திரையாக சென்றனர்.
- பாத யாத்திரை அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவிலை அடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
புதுச்சேரி:
விநாயகருக்கு உகந்த நாளாக ஒவ்வொரு மாத மும் சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சி நடைபெறும். ஆவணி மாதத்தில் நடை பெறும் சங்கடஹர சதுர்த்தி மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
இதனை மகா சங்கடஹர சதுர்த்தி என அழைப்பது உண்டு. இந்த மகா சங்கடஹர சதுர்த்தியன்று ஒவ்வொரு ஆண்டும் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவில் வரை பக்தர்கள் பாத யாத்திரை செல்வது வழக்கம்.
அதுபோல் இன்று மகா சங்கடஹர சதுர்த்தியை யொட்டி புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலை முன்னே செல்ல பக்தர்கள் பின் தொடர்ந்து பாத யாத்திரையாக சென்றனர்.
இந்த பாத யாத்திரை நிகழ்ச்சியை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி ஜெயமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த பாத யாத்திரையில் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பாத யாத்திரை அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவிலை அடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
- மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிலர் தேங்காயை வீசி உடைத்ததை பார்த்து அதிசயித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் புதுவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் மணக்குள விநாயகர் கோவிலில் வழிபடுவார்கள்.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்தனர். பின்னர் மணக்குள விநாயகர் கோவிலை சுற்றி பார்த்தனர்.
அப்போது மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிலர் தேங்காயை வீசி உடைத்ததை பார்த்து அதிசயித்தனர். அவர்களிடம் ஸ்பெயின் நாட்டினர் எதற்காக இவ்வாறு தேங்காய் வீசி உடைக்கிறீர்கள் என்று இருந்தவர்களிடம் கேட்டனர். அதற்கு, தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்வதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு வியந்த ஸ்பெயின் நாட்டவர்கள் அருகில் உள்ள கடையில் தேங்காய்களை வாங்கி உடைத்து வழிபட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.
- புதுவையில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
- பழனிசாமி நீடூழி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்து, 1008 தேங்காய் உடைத்து தங்கதேர் இழுத்து வழிபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று தலைமை கழகத்தில் கொடியேற்றி பட்டாசு வெடித்தும், எம்.ஜி.ஆர் சிலை ஜெயலலிதா உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள். ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி நீடூழி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்து, 1008 தேங்காய் உடைத்து தங்கதேர் இழுத்து வழிபட்டனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் சுப்பையா சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயத்திலும், முல்லா வீதியில் உள்ள ஹஜ்ரத் சையத் அஹமத் மவுலா சாஹீப் வலியுல்லாஹ் தர்காவிலும் பிரார்தனை நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாகமணி, பி எல் கணேசன், வி.கே. மூர்த்தி, காந்தி, குமுதன், மணவாளன், , நகர கழக செயலாளர்கள் அன்பழக உடையார், சித்தானந்தம், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமிஉட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாமுத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள திருக்குறள் மணிக்கூண்டு அருகே புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மாநில கழக இணை செயலாளர் காசிநாதன், மாநில கழக இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், தொகுதி கழக செயலாளர் பழனிசாமி, கோபால், வில்லியனூர் மணி, கஜேந்திரன், நகர கழக செயலாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மோகன், மாநில வர்த்தக அணித் தலைவர் செல்வம்மாநில மீனவர் அணி துணை செயலாளர் விஸ்வநாதன், மாநில சிறுபாண்மையினர் துணை தலைவர் அந்துவான், இளைஞர் அணி இணை செயலாளர் கன்னியப்பன், அஜய், தொகுதி கழக இணை செயலாளர் தனலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், ஜெயபால், பாண்டு, ஷாஜகான், குப்பன், மண்ணாங்கட்டி, முனியாண்டி, வாசு, எத்திராஜ், பிரபா, நாடாராஜ் ஆறுமுகம், வார்டு செயலாளர் வினோத்குமார், விநாயகமூர்த்தி, பச்சையப்பன், முரளிதரன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டான சோபகிருது ஆண்டு இன்று பிறந்தது.
புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து அமெரிக்க வைரம் பொருத்தப்பட்ட கிரீடம், தங்க கவசம் மணக்குள விநாயகருக்கு அணிவிக்கப்பட்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், ரெயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்பிரமணியர், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள், முத்தியால்பேட்டை வன்னிய பெருமாள், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
- புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தணிக்கை அதிகாரி ஜெகன்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தணிக்கை செய்தனர்.
- அறநிலையைத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 243 கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இதன் மூலம் வரும் வருமானம் மற்றும் கோவில் உண்டியல்கள் மூலம் வரும் வருமானம் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்ய கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கோவில் தணிக்கை பிரிவு செயல்பட்டு வருகிறது.
கோவில்கள் தணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விண்ணப்பித்து தகவல் கேட்டபோது 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது. இதுதொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தணிக்கை அதிகாரி ஜெகன்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தணிக்கை செய்தனர். மணக்குள விநாயகர் கோவில் தங்க பொருட்கள், வெள்ளி பொருட்கள், கோவில் சிலைகள், வருவாய் உள்ளிட்ட கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து அறநிலையைத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- புதுவை மணக்குள விநாயகர் கோவில் உள்பு றத்தில் மூலவரை பார்த்த வண்ணம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. சண்டிகேஸ்வரர் கும்ப சென்டர் என பெயர் பெற்றவர்.
- சண்டிகேஸ்வரர் சன்னதி கோபுரம் 45 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டு கவச விமானம் பணி நிறைவடைந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் கோவில் உள்பு றத்தில் மூலவரை பார்த்த வண்ணம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
சண்டிகேஸ்வரர் கும்ப சென்டர் என பெயர் பெற்றவர். இவர் விநாயகரை பார்த்த வண்ணம் அமர்ந்திருப்பார். இவர் பக்தர்களுக்கு பூர்விக பூண்ணிய பலனை கொடுப்பவர். பக்தர்கள் கோவிலுக்கு வரும் பொழுது மணக்குள விநாயகரை தரிசித்து விட்டு கடைசியாக சண்டிகேஸ்வரரிடம் வந்து அவரை வணங்கி விட்டு உள்ளங்கையில் 3 முறை தட்டி விட்டு செல்வர்.
இவ்வாறு செய்தால் விநாயகரிடம் விடுத்த வேண்டுதல் மற்றும் பூஜை பலனை முழுவதுமாக சண்டிகேஸ்வரர் பக்தர்களுக்கு வாங்கி கொடுப்பார் என்பது ஐதீகம்.
சண்டிகேஸ்வரர் சன்னதி கோபுரம் 45 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டு கவச விமானம் பணி நிறைவடைந்துள்ளது.
இதன் கும்பாபிஷேகம் 1-ந் தேதி 11 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- இன்று இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.
- 17-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
புதுச்சேரியில் பிரசித்திப்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் 62-ம் வருட பிரம்மோற்சவ விழா கடந்த 31-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் வெள்ளி யானை, இந்திர, குதிரை, முத்து பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் விநாயகர் வீதிஉலாவும் நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை புதுவை கடற்கரையில் கடல் தீர்த்தவாரி நடந்தது. அப்போது வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதிஉலா கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது. அதனைதொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் இன்று தெப்ப உற்சவமும், 17-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 23-ந்தேதி 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.
- இன்று முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.
- 23-ந்தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.
மணக்குள விநாயகர் கோவிலின் 62-வது பிரம்மோற்சவ விழா நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.
9-ந் தேதி காலை 7 மணிக்கு ரதோற் சவம், தொடர்ந்து கன்யா லக்னத்தில் திருத்தேர் வீதியுலா நடக்கிறது.
10-ந் தேதி காலை நர்த்தன கணபதி நேரடி உற்சவம், பவுர்ணமி கடல் தீர்த்தவாரி வெள்ளி மூஷிக வாகன சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.
11-ந் தேதி காலை 11 மணிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம், 15-ந் தேதி காலை கிருத்திகை, இரவு பால சுப்ரமணியர் உற்சவம், வெள்ளி மயில் வாகன வீதி உலாவும் நடக்கிறது.
விழாவில் 17-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும், 18-ந் தேதி விடையாற்றுதல் உற்சவமும், 22-ந் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது.
விழாவில் 23-ந் தேதி மதியம் உற்சவ சாந்தி நிகழ்ச்சியும், 108 சங்காபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் தேவஸ்தான அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
- செப்டம்பர் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தினமும் காலை, இரவு சாமி வீதி உலா நடக்கிறது.
- 23-ந்தேதி மதியம் உற்சவ சாந்தி நிகழ்ச்சி, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் 62-வது பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சாமி வீதி உலா நடக்கிறது.
9-ந் தேதி காலை 7 மணிக்கு ரகோத்சவம், 10-ந் தேதி காலை வர்த்தன கணபதி நேரடி உற்சவம், பவுர்ணமி கடல் தீர்த்தவாரி வெள்ளி மூஷிக வாகன சாமி வீதி உலாவும் நடக்கிறது. 11-ந் தேதி பகல் 11 மணிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
15-ந் தேதி காலை கிருத்திகை, இரவு பால சுப்ரமணியர் உற்சவம், வெள்ளி மயில் வாகன வீதி உலாவும், 17-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும், 18-ந் தேதி விடையாற்றுதல் உற்சவமும், 22-ந் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது.
23-ந் தேதி மதியம் உற்சவ சாந்தி நிகழ்ச்சி, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் தேவஸ்தான அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு 1008 சங்காபிஷேகம், உற்சவ மூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு உற்சவ மூர்த்தி வீதியுலா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அதிகாரி வெங்கடேசன் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்