search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maneka Gandhi"

    • பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால் ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் என்பவரால் நிறுவப்பட்டது இஸ்கான்
    • கோசாலை அமைக்க அரசாங்கத்திடமிருந்து உதவிகளை பெறுகிறார்கள்

    மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மறைந்த மூத்த மகனான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி. இவர் தீவிர வனவிலங்கு உரிமை ஆர்வலராகவும் சுற்றுபுற சூழல் ஆர்வலராகவும் செயல்படுபவர். தற்போது ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினராக இருக்கும் இவர் பல முறை மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    இந்துக்கள் வழிபடும் தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால் இந்தியாவை சேர்ந்த இந்து மதகுரு 'ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர்' என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம், இஸ்கான் எனும் "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON). "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" இயக்கம் எனவும் வழங்கப்படும் இந்த இயக்கத்திற்கு, அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் கிளைகள் உள்ளது. தங்கள் கோட்பாடுகளில் ஒன்றாக சைவ உணவு பழக்கத்தை பிரச்சாரம் செய்யும் இவர்கள் உணவில் பாலை முக்கிய பொருளாக சேர்த்து கொள்ளும் பழக்கமுள்ளதால் பசுக்களை வளர்ப்பதில் ஈடுபாடுடையவர்கள். அதற்காக பசுக்களை வளர்க்கும் கோசாலைகளை அதிகளவில் பராமரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மேனகா காந்தி, இந்த அமைப்பின் மீது குற்றம்சாட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    இஸ்கான் நாட்டிலேயே மிக பெரிய மோசடி அமைப்பு. அவர்கள் கோசாலை அமைக்க அரசாங்கத்திடமிருந்து உதவிகளை பெற்று பெரிய நிலபரப்புகளை பெற்று கொள்கிறார்கள். பால் மற்றும் பசு வளர்ப்பை ஊக்கப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், அவர்களை போல் பசுக்களை இறைச்சிக்கு அதிகளவில் விற்பனை செய்பவர்கள் யாருமில்லை. ஆந்திராவிலுள்ள அனந்தபூர் கோசாலைக்கு சென்றிருந்தேன். அங்கு பால் தருவதை நிறுத்தியதால் பராமரிக்கப்படும் பசுக்கள் ஒன்றை கூட என்னால் காண முடியவில்லை. அனேகமாக அவர்கள் பசுக்களை கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று விடுகிறார்கள்.

    இவ்வாறு மேனகா தெரிவித்திருந்தார்.

    இக்குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இஸ்கான் இயக்க செய்தி தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்தா தாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவர் அதில் கூறியதாவது;

    மேனகா காந்தியின் இந்த கருத்து ஆச்சரியத்தை அளிக்கிறது. மாட்டிறைச்சியை பெருமளவில் உண்ணும் பல நாடுகளில் கூட இஸ்கான் பசுக்களை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட கோசாலைகளை அமைத்து பசுக்களையும், எருதுக்களையும் அவை பால் சுரப்பதை நிறுத்திய பிறகும் கூட அதன் வாழ்நாள் முழுவதும் இஸ்கான் பராமரித்து வருகிறது. விபத்தில் காயமடைந்த பசுக்களையும், கசாப்பு கடைக்கு கொண்டு செல்லப்படும் பசுக்களையும் மீட்டு வளர்த்து வருகிறது. எங்கள் அமைப்பின் கோசாலைகளை நேரில் கண்டு பலர் பாராட்டியுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளால் தரப்பட்ட சில கோப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்தால் உண்மை விளங்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது போன்று சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பிறவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என மேனகா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
    சுல்தான்பூர்:

    மத்திய அரசு, தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.5, ரூ.10 என்ற அளவுக்கு குறைத்தது. இதே போல பல மாநிலங்களும் அவற்றுக்கான மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளன.

    இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து சாமானிய மக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு சற்றே நிம்மதியை தந்துள்ளது.

    அதே நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரியும், சுல்தான்பூர் தொகுதி எம்.பி.யுமான மேனகா காந்தி தனது தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இதே போன்று சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பிறவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இதுவும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

    மத்திய அரசு

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சி, கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை முறையே ரூ.13, ரூ.16 உயர்த்தியது. இதை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    மேலும், காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் மிகவும் ஏழையாக உள்ள மக்களுக்கு வழங்குகிற உணவு தானியங்களை அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா, பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் தலா ரூ.15 அளவுக்கு குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

    தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் சர்ச்சைகுரிய கருத்தை பேசியதாக மத்திய-மந்திரி மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #ManekaGandhi #ElectionCommission
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார். கடந்த 14-ம் தேதி சுல்தான்பூர் தொகுதியில் உள்ள சர்கோதா கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட மேனகா காந்தி, தனக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஏ.பி.சி.டி., என வாக்காளர்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்றார் போல் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்று பேசியிருந்தார்.



    இந்நிலையில் மேனகா காந்தியின் இந்த சர்ச்சைக் கருத்துக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்திலும் இதுபோன்ற நடத்தை விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

    மேனகா காந்தி கடந்த 11-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசியிருந்தார். அதனால், பொதுக் கூட்டம், பேரணி, பேட்டி போன்ற செயல்களில் ஈடுபட தேர்தல் ஆணையம் அவருக்கு கடந்த 15-ம் தேதி 48 மணி நேரம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #ManekaGandhi #ElectionCommission 
    சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #LokSabhaElections2019 #ManekaGandhi
    புதுடெல்லி:

    சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்தி பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின்னர் திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரத்தின் போது மேனகா காந்தி கூறியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் அவருக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்து இருக்கிறது.

    ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் தன்னை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், அவரது உள்ளாடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, தான் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பதற்கு மாயாவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். “இந்தியா ஜனநாயக நாடு என்றும், இதுபோன்று தடை விதிப்பது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல் என்றும்” அவர் கூறி இருக்கிறார். #LokSabhaElections2019  #ManekaGandhi
    மத்திய அமைச்சர் மேனகா காந்தி எம்.பி.யாக உள்ள பிலிபிட் மக்களவை தொகுதியை, தனது மகன் வருண் காந்திக்கு விட்டு கொடுக்கிறார். #VarunGandhi #ManekaGandhi
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி மேனகா காந்தி உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

    அவர் 1996, 1998, 1999, 2004, 2014 தேர்தல்களில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

    தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மேனகா காந்தி தொகுதி மாறுகிறார். அவர் தனது மகனுக்கு பிலிபிட் தொகுதியை விட்டுக் கொடுக்கிறார்.

    வருண்காந்தி கடந்த தேர்தலில உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியை ஒட்டி சுல்தான்பூர் இருக்கிறது. அங்கு வலுவான காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் வருண்காந்தி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று மேனகா காந்தி அச்சப்படுகிறார்.

    இதன் காரணமாகவே மேனகா காந்தி தான் பலமுறை வெற்றி பெற்ற பிலிபிட் தொகுதியை வருணுக்கு விட்டு கொடுக்கிறார்.



    மேனகா காந்தியின் இந்த வேண்டுகோளை பா.ஜனதா மேலிடம் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. வருண் காந்தி ஏற்கனவே 2009 தேர்தலில் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு 50.09 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறார். இதனால் அவருக்கு கட்சி மேலிடம் அந்த தொகுதியை ஒதுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் மேனகா காந்தி அரியானா மாநிலம் கர்ணல் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

    2014 தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அஸ்வினி குமார் சோப்ரா வெற்றி பெற்று இருக்கிறார். #VarunGandhi #ManekaGandhi
    பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழுவை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். #ManekaGandhi #metoo
    புதுடெல்லி:

    மீடூ பிரசாரம் மூலம் பெண்கள் பணியிடங்களில் சந்தித்த பாலியல் தொல்லைகள் வெளியாகி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். 

    இப்போது பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழுவை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். 

    “அரசியல் கட்சிகள் உள் விசாரணை குழுவை அமைக்க கோரி அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இங்கு 6 தேசிய கட்சிகள், 90 சிறிய கட்சிகள் உள்ளது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என கூறியுள்ளார்.  #ManekaGandhi #metoo
    பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் டுவிட்டர் மூலம் நடத்திவரும் #MeToo புகார் தொடர்பாக விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். #committeeof #retiredjudges #publichearings #MeToocases #ManekaGandhi
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் டுவிட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர்.
     
    அதேவேளையில், இந்திய திரையுலகிலும் இந்த #MeToo இயக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    அவ்வகையில், முன்னர் பிரபல பத்திரிகையாளராக இருந்து, பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். 



    இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? எம்.ஜே.அக்பர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதே கோரிக்கையை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் டுவிட்டர் மூலம் நடத்திவரும் #MeToo பிரசாரம் தொடர்பாக பொது விசாரணை செய்ய 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மகளிர் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 

    பாதிக்கப்பட்ட பெண்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகளை நான் நம்புகிறேன். அவர்களின் வலியும் வேதனையும் எனக்கு புரிகிறது. இந்த குழுவில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை வல்லுனர்களும் இடம்பெறுவார்கள்.  #MeToo பிரசார இயக்கம் தொடர்பான புகார்களை இந்த குழுவினர் விசாரிப்பார்கள் என மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார். #committeeof #retiredjudges #publichearings #MeToocases #ManekaGandhi
    அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, மத்திய மந்திரி மேனகா காந்தி, கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஜெயமாலா ஆகியோர் வரவேற்றுள்ளனர். #Sabarimala #SabrimalaVerdict #SupremeCourt #ManekaGandhi
    புதுடெல்லி:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்து வந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய அமர்வு, சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை தகர்த்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல. இந்த தடை இந்து பெண்களின் உரிமைக்கு எதிரானது’ எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்த தீர்ப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி வரவேற்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேனகா காந்தி, ஒரு குறிப்பிட்ட பாலினம் அல்லது சமூகத்துக்கு மட்டுமே இந்து மதம் என்ற தடை அகற்றப்பட்டு, இந்துத்துவம் ஒரு ஜாதிக்கானது அல்ல என்பதை சபரிமலை தீர்ப்பு நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ளார்.



    இதேபோல், சபரிமலை கோவிலுக்கு அனைத்து பெண்களும் நுழையலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஜெயமாலா குறிப்பிட்டுள்ளார்.

    நீதித்துறைக்கும், உச்சநீதிமன்றத்துக்கும், சட்டவிதிகளை இயற்றிய அம்பேத்கருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள ஜெயமாலா, தற்போதுதான் பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாட்டின் பல்வேறு அமைப்புகளும், தலைவர்களும் வரவேற்று வரும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை அர்ச்சகர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார். #Sabarimala #SabrimalaVerdict #SupremeCourt #ManekaGandhi
    சிறையில் இருக்கும் தாய்க்கும், குழந்தைக்கும் தொடர்பு இல்லாமல் போவதை தவிற்க அவர்கள், வாரம் 3 முறை சிறையில் சந்திக்க உள்துறை அமைச்சகத்துக்கு மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார். #ManekaGandhi
    புதுடெல்லி :

    சிறைச்சாலைகளில் குழந்தை பெற்றெடுக்கும் தாய்கள் அல்லது குழந்தை உள்ள பெண்களை சிறையில் அடைக்கும் போது ஐந்து வயது வரை குழந்தைகளை அவர்கள் சிறைக்குள் வைத்திருக்க முடியும்.  ஐந்து வயதை தாண்டிய குழந்தைகள் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் நல காப்பகங்களில் சேர்த்து விடப்படுவர்.

    அவ்வாறு காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கும், சிறை நிர்வாகத்துக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்படு விடுகிறது. இதன் காரணமாக, சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் தாயும், குழந்தையும் மீண்டும் ஒன்று சேர முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.

    தாயை பிரிந்த குழந்தைகள் தவறான பாதையை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது. இது தவிர சில பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படும் அவலமும் நடைபெறுகிறது.

    இதற்கெல்லாம் காரணம், சிறையில் உள்ள தாய்க்கும் குழந்தைகும் இடையே தொடர்பு இல்லாமை என சில தரவுகளின் அடிப்படையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை  அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

    எனவே இதுபோன்ற செயல்களை தவிற்கும் பொருட்டு, காப்பகத்தில் உள்ள குழந்தைகள்  வாரம் மூன்று முறை சிறையில் உள்ள அவர்களின் தாயை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார். #ManekaGandhi
    நாடாளுமன்ற மக்களவையில் திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டார். #ManekaGandhi #OtherOnes #Transgender
    புதுடெல்லி:

    மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் தடுப்பு மசோதா பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டார். அதற்கு எம்.பி.க்களிடையே சிரிப்பொலி எழுந்தது.

    ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக, மேனகா காந்திக்கு திருநங்கைகள் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேஜையை தட்டியபடி சிரித்த மேனகா காந்தியும், எம்.பி.க்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

    இந்நிலையில், மேனகா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மற்றொருவர் என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் சிரிக்கவில்லை. திருநங்கைகள் பற்றிய அதிகாரபூர்வ சொல் எனக்கு தெரியாது. அதுவே எனக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கி விட்டது. இனிமேல், அதிகாரபூர்வ தகவல் தொடர்பில், திருநங்கையர் ‘டி.ஜி.’ என்று குறிப்பிடப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். #ManekaGandhi #OtherOnes #Transgender #Tamilnews
    புதிய சட்டத் திருத்தத்தின்படி குழந்தைகளை தத்து கொடுக்கும் அதிகாரம் மாவட்ட கலெக்டர் அளிப்பார் என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். #ManekaGandhi #Adoption
    புதுடெல்லி:

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மத்திய மந்திரி மேனகா காந்தி டெல்லியில் நடந்த அனைத்து மாநில பெண்கள் நலத்துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், ‘‘குழந்தைகள் நீதி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. தற்போது குழந்தைகளை தத்துக் கொடுப்பதற்கான ஒப்புதல் கோர்ட்டுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத் திருத்தத்தின்படி இனி இதற்கான ஒப்புதலை மாவட்ட கலெக்டர் அளிப்பார். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் பாதுகாப்பு மையங்களும் அடுத்த ஒருமாதத்துக்குள் தத்துக் கொடுப்பதற்கான தலைமை அமைப்பிடம் தங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

    அண்மையில் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்றில் சட்டவிரோதமாக குழந்தைகள் தத்து கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கு போலீசார் நடத்திய சோதனையில் ஒரு குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது, தெரிய வந்தது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.  ManekaGandhi #Adoption #tamilnews 
    நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று உத்தரவிட்டார். #ChildCare #Registered #ManekaGandhi
    புதுடெல்லி:

    அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ நிறுவனம், ஜார்கண்ட் மாநிலத்தில் நடத்தி வரும் குழந்தைகள் மையம், தத்தெடுப்பு என்ற பெயரில் 3 குழந்தைகளை பணத்துக்கு விற்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் நல்வாழ்வு மையங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி நேற்று உத்தரவிட்டார்.

    அத்துடன், குழந்தைகள் தத்தெடுப்புக்கென தேசிய அளவில் செயல்படும் உயரிய அமைப்பான ‘காரா’வில் அனைத்து மையங்களும் ஒரு மாதத்துக்குள் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 
    ×