என் மலர்
நீங்கள் தேடியது "Manjolai Workers"
- மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும்,.
- உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடந்தாண்டு டிசம்பர் 3 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய அனைத்து வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தக் கோரிய கிருஷ்ணசாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
- மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.
- அஞ்சலி செலுத்த வந்த கட்சியினர் அரசு விருந்தினர் மாளிகை அருகே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து சென்று தாமிரபரணி ஆற்றில் மரியாதை செலுத்தினர்.
நெல்லை:
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவத்தின் 23- வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் தாமிரபரணி ஆற்றில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் நீலகிருஷ்ணமுரளி யாதவ், மாவட்ட செயலாளர் குட்டி என்ற வெங்கடாசலபதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் லெட்சுமணன் தலைமையில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் காசி விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் உடையார், மாநகர தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் பொதுச்செயலாளர் பால முருகன் நிர்வாகிகள் முத்து கருப்பன், பிரேம்குமார், பால்ராஜ், பச்சை தங்கவேலு. சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நிர்வாகிகள் நெல்லையப்பன், துரைபாண்டியன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர். தமிழர் விடுதலை களம் சார்பில் முத்துகுமார், தமிழர் உரிமை மீட்பு களத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையில் நிர்வாகிகள் மரியாதை ெசலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த கட்சியினர் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து சென்று தாமிரபரணி ஆற்றில் மரியாதை செலுத்தினர்.