search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marriage longing"

    • சுந்தரேசன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா வட மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை . விவசாயி. அவருடைய மகன் சுந்தரேசன் (வயது 25).திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த அவர் தனது பெற்றோரிடம் எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.

    இதற்கு அவரது தந்தை ஏழுமலை கடன் வாங்கி திருமணம் செய்து வைக்கிறேன் என அறிவுறுத்தி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுந்தரேசன் வீட்டில் விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர்வீ ட்டில் மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள்அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுந்தரேசன் பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் ,சப் -இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    திருப்புல்லாணி அருகே திருமணத்துக்கு யாரும் பெண் கொடுக்காததால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள மொட்டையன் வலசையை சேர்ந்தவர் சித்திரவேலு. இவரது மகன் ரஞ்சித் (வயது 23). வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த இவர் திருமணத்துக்கு பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார்.

    ரஞ்சித்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பெண் பார்ப்பதில் சிக்கல் இருந்தது.

    திருமணத்துக்கு யாரும் பெண் தராததால் கடந்த ஒரு வாரமாகவே ரஞ்சித் விரக்தியுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பெறுப்பு) யமுனா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×