search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "martial law"

    • பதற்றம் நிறைந்த மாகாணங்களில் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
    • தனது கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9ம் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு வந்தபோது, அவரை துணை ராணுவப்படை ரேஞ்சர்கள் திடீரென கைது செய்து அழைத்துச்சென்றனர். இதையடுத்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ராணுவ நிலைகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசாருடன் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது. இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பதற்றம் நிறைந்த மாகாணங்களில் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராணுவம் குவிக்கப்பட்டதற்கு எதிராக இம்ரான் கான் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். பஞ்சாப், கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில மாகாணங்களில் அரசியலமைப்புச் சட்டம் 245ஐ பயன்படுத்திய ஷெபாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அதில், நாட்டின் சில பகுதிகளில் ராணுவச் சட்டம் போன்ற நிலைமை இருப்பதாகவும், தனது கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அரசியலமைப்பின் 245வது பிரிவின் கீழ், நாட்டைப் பாதுகாக்க சிவில் நிர்வாகத்திற்கு உதவ ராணுவத்தை அழைக்கலாம் என்பது  குறிப்பிடத்தக்கது.

    ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் நாளை முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. #UkraineMartialLaw #Crimea #RussiaSeizesShips
    கீவ்:

    உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று முன்தினம் கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்திருக்கிறது.  

    ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் அசோவ் கடற்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், உக்ரைனின் ரஷ்ய எல்லையில்  உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய ராணுவச் சட்டத்தை அமல்படுத்த உக்ரைன் அரசு முடிவு செய்தது. இதற்காக பாராளுமன்றத்தில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவை நிறைவேற்ற 226 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக 276 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

    ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள மோல்டோவாவின் டிரான்ஸ்னிஸ்டிரியா பிராந்தியம் மற்றும் கருங்கடல் ஓரம் உள்ள பிராந்தியங்கள் மற்றும் அஸோவ் கடல் பகுதியில் இந்த சட்டம் அமலில் இருக்கும். இந்த பிராந்தியங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிளவுபட்ட பிராந்தியமான டிரான்ஸ்னிஸ்டிரியாவில் ரஷ்ய படைகள் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



    தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலில் 60 நாட்களுக்கு ராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆணையில் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கையெழுத்திட்டார். அதன்பின்னர், 30 நாட்களாக குறைத்தார்.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் கூறுகையில், ‘ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் போர் பிரகடனம் என்று அர்த்தம் அல்ல.  உக்ரைன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை’ என்றார். #UkraineMartialLaw #Crimea #RussiaSeizesShips
    ×