search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "material damage"

    • திடீரென்று கூரை வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது.
    • தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் தீயை அணைக்க முடியவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் பி.என். பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 46). சம்பவத்தன்று இரவு கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கூரை வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் தீ மளமளவென பரவி கூரை வீடு எரியத் தொடங்கியது.

    அப்போது வீட்டில் இருந்த கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தனர். இதனைத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் தீயை அணைக்க முடியவில்லை. வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணம் தீ யில் எரிந்து நாசமாயின. இது குறித்து கந்தன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×