search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Services"

    • பவுனாம்பாள் நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
    • நகர் நல அலுவலர் எழில் மதனா, வார்டு செயலாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பவுனாம்பாள் நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகர மேயர் சுந்தரி ராஜா கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நகரத்துடன் நல வாழ்வு மையத்தை திறந்து வைத்து மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார். இதில் பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர் சாய்துநிஷா சலீம், நகர் நல அலுவலர் எழில் மதனா, வார்டு செயலாளர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • 100 கிராமங்களை தத்தெடுப்பது இந்திய மருத்துவ சங்கத்தின் கனவு திட்டமாகும்.
    • விரைவில் மீதி 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    இந்திய மருத்துவ சங்க(ஐ.எம்.ஏ.) அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, இந்திய மருத்துவ சங்க சி.ஜி.பி. பிரிவு மற்றும் ஏ.எம்.எஸ். பிரிவு தொடக்க விழா, டாக்டர்கள் தின கொண்டாட்டம் ஆகிய ஐம்பெரும் விழா திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி ஓட்டலில் நடந்தது. ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார். ஐ.எம்.ஏ.அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை தலைவர் டாக்டர் மோகன சுந்தரி வரவேற்புரையாற்றி தனது பொறுப்பை புதிய தலைவர் டாக்டர் அஜாஸ் பி.அன்சாரியிடம் ஒப்படைத்தார்.

    டாக்டர் அஜாஸ் பி.அன்சாரி அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன், பொருளாளர் டாக்டர் கே.சுந்தரமூர்த்தி, துணை தலைவர் டாக்டர் பி.ஹரிவீர விஜயகாந்த், இணை செயலாளர் டாக்டர் பி.நல்லசிவம், மத்திய கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முமகது முபாரக் அலி, மாநில கவுன்சில் உறுப்பினர் டாக்டர் கே.பொம்முசாமி, ஆலோசனை குழு உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன், டாக்டர் யு.ரமணி, டாக்டர் என்.ராஜ்குமார், டாக்டர் எஸ்.சரவணன், டாக்டர் ஆர்.பிரகாஷ் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார்.

    திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை சார்பில் அனைத்து மருத்துவ சேவை வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள கணியாம்பூண்டி கிராமத்தை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதேபோல் 21 டாக்டர்களுக்கு 'பில்லர்ஸ் ஆப் டெக்ஸ்சிட்டி' என்ற விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி வழங்கி பேசியதாவது, பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக 100 கிராமங்களை தத்தெடுப்பது இந்திய மருத்துவ சங்கத்தின் கனவு திட்டமாகும். இதற்காக இதுவரை 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மீதி 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகரஜன், தேசிய ஐ.எம்.ஏ. முன்னாள் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், துணை தலைவர் டாக்டர் ஆர்.குணசேகரன், ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தேர்வு தலைவர் டாக்டர் அபுல் ஹசன், மேற்கு மண்டல துணை தலைவர் டாக்டர் கருணா, முன்னாள் துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, டி.எம்.எப். டாக்டர் தங்கவேல், ஸ்ரீ குமரன் மருத்துவமனை டாக்டர் செந்தில் குமரன், ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. டாக்டர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார்.

    • கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை, மருத்துவ சேவையில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிதம்பரம் கலந்து கொண்டு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து உரையாற்றினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை, மருத்துவ சேவையில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கிற்கு பேச்சு குறைபாடுகள் மற்றும் செவித்திறன் பிரிவின் இயக்குனர் ராஜன் தலைமை தாங்கினார். மும்பை, காது கேளாத மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரும், தேசிய மற்றும் பண்பாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பின் ஆலோசகருமான ரங்கசாமி கலந்து கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், நவீன தொழில்நுட்பத்துடன் செய்ய வேண்டிய அவசியம் பற்றி பேசினார்.

    புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சிதம்பரம் கலந்து கொண்டு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து உரையாற்றினார். மேலும் மருத்துவமனை, மருந்தகம், ஆய்வுக்கூடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய வசதிகள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியின் இணைப்பதிவாளர் பெருமாள் செய்திருந்தார்.

    ×