search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meeting of opposition"

    • எதிர்க்கட்சிகளின் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
    • தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

    மதுரை

    தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மதுரையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும். பா.ஜ.க.வுடன் தனியாக மோதினால் வெல்ல முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தலை த.மா.கா. சந்திக்கும். விரைவில் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளன.

    டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடினால் தான் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க முடியும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமலாக்கத் துறை சோதனையை சரி என்கிறது. ஆனால் ஆளுங் கட்சியாக மாறிய பின் தவறு என்கிறது.

    தி.மு.க. மக்களுக்கு அதிக வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளது. தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத் தலை வர் ராஜாங்கம், நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், சித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×