search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur Dam water level"

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
    • மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,038 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,864 கனஅடியாக சரிந்தது.

     சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சரிந்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,038 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,864 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 62.65 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 63.40 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 27.03 டி.எம்.சியாக உள்ளது.

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 51 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 47.33 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 47.17 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை 68.08 அடியாக குறைந்தது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை வெறும் 19 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 68.55 அடியாக இருந்தது. இன்று காலை இது 68.08 அடியாக குறைந்தது. #MetturDam
    காவிரியில் நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் அணை நீர்தேக்க பகுதியில் உள்ள நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலய கோபுரங்கள் முழுமையாக வெளியே தெரிகின்றன. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அடியோடு குறைந்து விட்டது. நேற்று அணைக்கு 95 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று 107 கனஅடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று அணை நீர்மட்டம் 70.02 அடியாக இருந்தது. இன்று காலை இது 69.96 அடியாக குறைந்தது. 7 மாதங்களுக்கு பிறகு இன்று அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 2லட்சம் கனஅடிக்கு மேல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை 4 முறை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்து வருகிறது. கடந்த ஜுலை மாதம் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டி இருந்தது. தற்போது காவிரியில் நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால் அணை நீர்தேக்க பகுதியில் உள்ள நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலய கோபுரங்கள் முழுமையாக வெளியே தெரிகின்றன.

    மேட்டூர் அணையில் ஓரளவு தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் அணையை நம்பி உள்ள சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராது என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார். #MetturDam
    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 1,250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 69 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 70 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 1,250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    நேற்று 71.91 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 71.80 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1,250 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    18-ந்தேதி 134 கன அடியாக இருந்த நீர்வரத்து 19-ந்தேதி 72 கன அடியாக குறைந்தது. நேற்று 81 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 121 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1,250 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 72.18 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 72.04 அடியாக சரிந்தது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.  #MetturDam
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று 86 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 118 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் கன அடி யாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 73.50 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 73.09 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 109 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 51 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 77.31 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி சரிந்து 76.3 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு நேற்று 75 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 109 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #Metturdam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று 75 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 109 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 79.3 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி சரிந்து 77.31 அடியாக இருந்தது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பலமடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று 116 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 119 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 11ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 300 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு வழக்கம்போல் 11ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பலமடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 81.2 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் ஒரு அடி சரிந்து 80.24 அடியாக குறைந்தது. இதே நிலை நீடித்தால் இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேமாக சரிய வாய்ப்பு உள்ளது. #MetturDam
    மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 144 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 164 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 8 ஆயிரம் அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.

    இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு வழக்கம் போல 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 84.2 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி சரிந்து 83.52 அடியானது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக கடந்த சில நாட்களாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 320 கன அடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 491 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 320 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கால்வாய் பாசனத்திற்கு கடந்த சில நாட்களாக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 320 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 15-ந் தேதி 100 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 86.83 அடியானது. இன்று மேலும் ஒரு அடி சரிந்து 85.71 அடியானது. இதனால் கடந்த 16 நாட்களில் 14.29 அடி நீர்மட்டம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    ×