என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Military Job"

    • சென்னை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக தலைமையகத்தின் மூலம் வேலூரில் ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக தலைமையகத்தின் மூலம் வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அக்னி வீர், சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், நர்சிங் உதவியாளர் மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    முகாமிற்கு தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். விண்ணப்பதாரர்கள்www.joinindianarmy.nic.in-ல் பதிவேற்றியபடி அந்தந்த பேரணி அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்க ளையும் கொண்டு வர வேண்டும். ஆவணங் களின் வடிவங்களும் அறிவிப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

    முழுமையான ஆவணங்கள் மற்றும் தவறான வடிவத்தில் உள்ளவை கொண்டு வரும் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×