search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister information"

    • 278 பணி யாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோ லைகள் வழங்கப்பட்டது.
    • புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நியமிக்க வும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணி யாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த மே 2020 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர் என மொத்தம் 8,361 பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன் களான ரூ.1,582 கோடியை வழங்கிட முதல்- அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

    விழுப்புரம் கோட்டத்தில், 4.11.2022 அன்று முதற் கட்டமாக ஓய்வுபெற்ற 137 பணியாளர்களுக்கு ரூ.18.63 கோடியும், 2-வது கட்டமாக 200 பேருக்கு ரூ.30.63 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மண்டலங்களில் ஓய்வு ெபற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் - வாரிசுதாரர்கள் என மொத்தம் 278 பணி யாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோ லைகள் வழங்கப்பட்டது, என்றார்.

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகை யில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான், போக்குவரத்துத்துறையை ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே 21,000-க்கும் அதிகமான பஸ்கள் இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துத்துறையை சீரமைத்து, அனைத்து பணியாளர்களும் மாதம் முதல் தேதியன்றே ஊதியம் பெறுகின்ற நிலையை உருவாக்கி கொடுத்தார். மேலும், பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளார். மகளிர் கட்டணமில்லா பஸ் சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டொன்றுக்கு ரூ.2,500 கோடி நிதியுதவியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். புதியதாக பஸ்கள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு  போக்குவரத்து கழகத்திற்கும் புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நியமிக்க வும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது, என்றார். இதில் ரவிகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


    அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

    முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பள்ளி திறக்கும் நாளில் இத்திட்டம் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. திட்டம் தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படும்.

    அவர்கள் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் கொடுக்கப்படும். 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். இதில் மாற்றம் இருக்காது. சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகாசியில் ரூ.150 கோடியில் நவீன வசதிகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கு நடந்தது.தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் முன்னிலை வகித்தர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இதில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்ட 5 வளர் இளம் பருவத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலும், 1 வளர் இளம் பருவத் தொழிலாளிக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 45ஆயிரம் மதிப்பிலான மறுவாழ்வு நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

    அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

    எதிர் காலத்தில் பட்டாசு விபத்துக்களை தடுக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் தலைமையிலான குழுக்கள் விரைந்து செயல்படும். தமிழ்நாட்டிலேயே விருது நகர் மாவட்டத்தில் அதிக பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. சுமார் 56 ஆயிரம் பட்டாசுத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் பட்டாசு விபத்துக்களை தடுப்பது மட்டுமல்லாமல், தொழிலாளர்களை காப்பற்றுவதற்கும் சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    விபத்தில்லா பட்டாசு தொழில்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதன் விளைவாக இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.ஆபத்து என்று தெரிந்தும் மக்கள் வறுமை காரணமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையையும் தமிழக அரசுக்கும், பட்டாசு தொழிற்சாலைகள் உரிமையாளர்களுக்கும் உண்டு.

    இதுவரை தொழிலா ளர்களுக்கு பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் 35 ஆயிரத்து 961 தொழிலாளர்களுக்கு, எவ்வாறு பாதுகாப்பாக பணியாற்றவேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டு ள்ளது. பட்டாசு விபத்து குறித்து 1241 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 800 பட்டாசு ஆலைகளில் இதுவரை ஒரு விபத்து கூட ஏற்படவில்லை. விபத்தில்லா பட்டாசு நடக்கும் ஆலைகள் பின்பற்றும் வழிமுறைகளை மற்ற தொழிற்சாலைகள் வழிகாட்டியாக கொண்டு செயல்பட்டு விபத்துக்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன.
    • முகாமில் 2,960 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 2,401 பேருக்குப் பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியன சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. படித்த இளைஞா்கள், இளம்பெண்கள் என 11,306 போ் கலந்து கொண்டனா்.

    முகாமில் 2,960 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 2,401 பேருக்குப் பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டத்தோ்வுக்கு 559 போ் தகுதி பெற்றனா். திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் 260 நபா்கள் தோ்வு பெற்றனா். வெளிநாடுகளில் பணிபுரிய 187 போ் தோ்வு பெற்றனா்.

    வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது:-

    படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்ற உறுதிமொழியோடுதான் இந்த அரசு பொறுப்பேற்றுள்ளது. அரசுத் துறையின் சாா்பில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தாலும், தனியாா் துறையிலும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 62 இடங்களில் தனியாா் துறையினா் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி 90,643 இளைஞா்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளோம்.

    படித்த இளைஞா்களுக்காக தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, திறன் பயிற்சி அளித்து, அந்த நிறுவனமே அவா்களுக்கு வேலை தரக்கூடிய திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த முகாமில் வேலை கிடைக்காத இளைஞா்களுக்கு அடுத்த முகாமில் வேலைவாய்ப்பை உருவாக்கி, வேலை இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை என்ற உன்னத நிலையை உருவாக்குவோம் என்றாா்.

    நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ், மாவட்ட கலெக்டர் வினீத், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மண்டல இணை இயக்குநா் ஞானசேகரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழா, சமுதாய வளைகாப்பு விழா மற்றும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் சிவஞானம், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திர பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதற்கட்டமாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வளர் இளம் பெண்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் 240 கர்ப்பிணி பெண்களுக்கு, வளைகாப்பு சீதன பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

    அடுத்ததாக நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 119 உழைக்கும் மகளிருக்கு ரூ. 29.75 லட்சம் மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள், 61 மாற்று திறனாளிகளுக்கு ரூ. 35.89 லட்சம் மதிப்புள்ள விலையற்ற இரு சக்கர வாகனங்கள், கிராமங்களை சேர்ந்த 84 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் தொடங்க ரூ. 3.08 கோடி வங்கி கடன் உத்தரவுகளையும், நகராட்சியை சேர்ந்த 7 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள சூழல் நிதிக்கான காசோலையையும் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் சிறப்புரையாற்றும் போது, 42 வார்டுகள் கொண்ட ராஜபாளையம் நகராட்சியை 60 வார்டுகளாக மாற்றும் அளவு மக்கள் தொகை அதிகம் உடையது.

    இந்தப்பகுதி மக்களின் நீண்ட நாள் இரு பெரும் கோரிக்கைள், தாமிரபரணி கூட்டு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம்.

    இதில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவு பெறும் என்றார்.

    ×