search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ministers consulting"

    • உணவு உற்பத்திக்கான பரப்பை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களிடம் கோரியுள்ளது.
    • வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தான் நெல் கொள்முதல் செய்யப்படும்.

    காங்கயம்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் திருப்பூர் ஈரோடு மாவட்ட தனியார் அரிசி ஆலை அரவை உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் காங்கயம் அரிசி ஆலை சங்கத்தில் நடைபெற்றது‌.

    இதில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், உணவுப்பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நுகர்பொருள் வாணிப கழக செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு,வரும் பருவத்தில் நெல்லை அரைத்து கொடுப்பது குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ள நெல்லை அரைத்து தருவது குறித்து அரவை ஆலை உரிமையாளர்களுடன் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சார்பில்கூறுகையில்,கொள்முதல் செய்யப்படும் நெல் 16 சதவீதம் ஈரப்பதத்துடன் இருக்கும். இவ்வாறு வரும் நெல்லை அரவை செய்யும்போது ஒரு வேகவைப்பு மூலம் கொடுக்க அமைச்சர் கூறியுள்ளார்.

    ஆனால் அவ்வாறு செய்தால் அரிசி உற்பத்தி அளவு குறைவு ஏற்படும். இதனால் அரசின் அரிசி ஆலைகளில் எந்த அளவு அரிசி உற்பத்தி வருகிறது என கூறினால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும் நெல் கொள்முதல் செய்யும் போதே ட்ரையர் அமைத்து கொள்முதல் செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும் என கூறினர்.

    மேலும் அரிசிக்கு ஜிஎஸ்டி போடப்பட்டதை தி.மு.க. அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என காங்கயம் தாராபுரம் மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இணைந்த அரிசி ஆலை உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் சக்கர பாணி கூறுகையில்,கொள்முதல் குடோனில் சேமிக்கும் போது ட்ரையர் அமைத்து நெல் ஈரப்பதம் 12 அல்லது 13 சதவீதம் இருக்கும் படி செய்து அரவைக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். சன்னரக நெல்லை அதிக அளவில் பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்து பயிரிட வலியுறுத்த உள்ளோம்.

    அரவை ஆலைகளுக்கு நெல் அரைத்து தரும்போது இரண்டு நாட்களில் பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். அரவை கூலி குவிண்டாலுக்கு புழுங்கல் அரிசிக்கு 100ம் பச்சை அரிசிக்கு 60 கொடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்‌. தற்போது 40 ரூபாய் கொடுக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் யாராவது இவ்வாறு வந்து அரவை செய்து கொடுக்க கேட்டுள்ளார்களா? இல்லை. நாங்கள் வருகிறோம் என்றால் மக்கள் நலனுடன் உங்களையும் இணைக்க முயற்சியே இது என்றார்.

    உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், உணவு உற்பத்திக்கான பரப்பை அதிகரிக்க மத்திய அரசு மாநிலங்களிடம் கோரியுள்ளது. அதன்படி உற்பத்தியாகும் நெல்லை அரைத்து கொடுக்க ஆலை அதிபர்கள் ஒத்துழைத்து கொள்முதல் செய்யும் நெல்லை அரைத்து கொடுக்க வேண்டும். அரைத்து கொடுக்கும் நெல்லுக்கு பணம் கிடைக்கவில்லை என்பது கடந்த காலங்களில் நடைபெற்றிருந்தாலும் தற்போது அவ்வாறு நடைபெறாது என்றார்.

    இதன்பின்னர் நிருபர்களிடம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், தற்போது காங்கயம் பகுதி நெல் அரவை ஆலை உரிமையாளர்களிடம் அரசு கொள்முதல் செய்யும் நெல்லை அரைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆண்டு முன்கூட்டியே டெல்டாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு முதன் முறையாக செப்டம்பர் மாதம் 1 ந்தேதி முதலே நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தான் நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் முன்னதாகவே கொள்முதல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கண்வலி விதைக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு விலை நிர்ணயம் செய்தவுடன் விதைகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய தயாராக உள்ளதாக கூறினார். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.300 கோடி இருந்தது. அது இந்த ஆட்சியில் உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டதின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    டெல்லியில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீதான மேல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    சென்னை:

    சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் கா. பாலச்சந்திரன், முதன்மைச் செயலாளர், மற்றும் வணிகவரி ஆணையர் சோமநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    4.5.2018 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற 27வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தின்போது சர்க்கரை மீதான 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கான மத்திய அரசின் கருத்துரு விவாதிக்கப்பட்டது. இந்த மேல்வரி விதிக்கும் முறையானது ஜி.எஸ்.டி. சட்டத்தின் கொள்கைக்கு மாறாக உள்ளதால் தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதாக இல்லை என்று அமைச்சர். டி.ஜெயக்குமார் அன்றையக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களும் சர்க்கரை மீது மேல்வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யும் பொருட்டு ஜி.எஸ்.டி. மன்றமானது அமைச்சர்கள் குழு ஒன்றினை 4.5.2018 அன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாடு, அசாம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் உள்ளடங்குவர். இந்தக் குழுவானது, சர்க்கரை மீதான மேல்வரி விதிப்பது மற்றும் அது தொடர்பான இனங்கள் குறித்து விவாதித்து அறிக்கை ஒன்றினை ஜி.எஸ்.டி. மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுடெல்லியில்14.5.2018 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீது 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கு அரசியல் சாசன கூறுகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தினை ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று வழங்க வேண்டுமென அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

    மேலும், ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு முன்பு இருந்த சர்க்கரை வளர்ச்சி நிதியில் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் எந்தெந்த காரணத்திற்காக, எந்தெந்த மாநிலத்திற்காக, எவ்வளவு நிதி வழங்கப்பட்டது. குறித்தான விவரத்தினையும் மத்திய அரசின் நுகர்வோர் நடவடிக்கைகள், உணவு மற்றும் பொது விநியோக துறையிடமிருந்து ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று இக்குழுவிற்கு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த விவரங்களின் அடிப்படையில், சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் குழுவின் அடுத்தக் கூட்டத்தினை வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி நாள் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ×