என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ministry of Finance"
- LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது
- இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்தியாவில் LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தன்பாலின, இருபாலின மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டில் உள்ள வங்கிகளில் கூட்டு வங்கிக் கணக்குகளைத் தொடங்கவோ, ஒருவர் தொடங்கிய வங்கிக் கணக்கில், Nominee-ஆக அச்சமூகத்தைச் சேர்ந்தவரை குறிப்பிடவோ எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கூறப்பட்ட கருத்துகளின்படி, LGBTQ சமூகத்தினர் பொது சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு காட்டப்படாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இந்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
- நினைவு நாணயம் பொதுப்புழக்கத்தில் விடப்படுமா? அல்லது தனிப்பட்ட பயன்பாட்டுக்கா? என்பது இன்னும் தெரியவில்லை.
- நினைவு நாணயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, நினைவு நாணயம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கிறது. பிறகு இந்திய ரிசர்வ் வங்கி அந்த நாணயத்தை அச்சிடுகிறது.
இந்நிலையில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாணயத்தை வடிவமைக்கும் பணி தற்போது நிதி அமைச்சகத்தால் நடைபெற்று வருகிறது.
நாணயத்தின் ஒருபுறத்தில் கருணாநிதியின் சிரித்த முகத்துடன், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு 1924-2024' என ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளது. மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா என ஆங்கிலத்திலும், பாரத் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த உத்தேச வடிவத்தில் தேவைப்படும் மாற்றங்களை மத்திய நிதியமைச்சகமே செய்யும். இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, நினைவு நாணயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. நினைவு நாணயம் பொதுப்புழக்கத்தில் விடப்படுமா? அல்லது தனிப்பட்ட பயன்பாட்டுக்கா? என்பது இன்னும் தெரியவில்லை.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இது போன்று நினைவு நாணயம் வெளியிடப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு முன்னாள் முதல்வர்களான கே.காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நினைவு நாணயம் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் நினைவு நாணயம் வெளியிடும் முறை கடந்த 1964-ல் தொடங்கியது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்காக முதல் நினைவு நாணயம் வெளியானது. இதைத் தொடர்ந்து முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமின்றி முக்கிய நிகழ்வுகளுக்கும் நினைவு நாணயம் வெளியானது. இவற்றில் சில பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளன. பல நாணயங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என்றானது.
தனிப்பட்ட பயன்பாட்டுக் கான நினைவு நாணயங்கள் அவை வெளியிடப்படும் மதிப்பை விட அதிகம். இவை ஒரு காசு முதல் ரூ.1,000 வரையிலான மதிப்பில் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு நினைவு நாணயமும் குறிப்பிட்ட அளவு, எடை, உலோகம், காசின் மதிப்பு, உருவம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நினைவுக் காசுக்கான தொகையை அச்சிடக் கோருவோர் செலுத்த வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்