என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mistreatment"
- அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் ஆன பிறகு சாதாரண நிலைக்கு சிகிச்சை பெற்று இருந்துள்ளார்.
- வருகின்ற நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் அடுத்த லலாகொட்டாய் பகுதியை சார்ந்த தங்கராஜ். இவரது மகள் காயத்ரி. இவர் தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு காயத்ரி உடல் நிலையை சரி செய்து மருத்துவர் ஸ்கேன் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்ததில் ஒட்டுக்குடல் இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தி, ரூ.50,000 செலவாகும் என தெரிவித்துள்ளார். அப்பொழுது அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்கள் ஆன பிறகு சாதாரண நிலைக்கு சிகிச்சை பெற்று இருந்துள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார்.
அப்பொழுது காயத்ரிக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பு ஊசி போட்ட பின் காயத்ரி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர் காயத்ரியை பரிசோதித்த பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
தொடர்ந்து 2 நாட்களுக்குப் பிறகு சேலம் தனியார் மருத்துவமனையில் காயத்ரியின் உடல்நிலை மோசமான நிலையில் சுயநினைவின்றி இருப்பதால் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் மூளை, தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற உடலுறுப்புகள் எந்தவித குறைபாடுகள் இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரியின் பெற்றோர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒட்டுக்குடல் சிகிச்சைக்காக வந்த காயத்ரிக்கு, தனியார் மருத்துவமனையில் மருத்துவர் கொடுத்த தவறான சிகிச்சையால் தற்பொழுது சுயநினைவின்றி இருந்து வருகிறார். இந்த மருத்துவமனையின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளது. வருகின்ற நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பில்லை.
எனவே காயத்ரியின் இந்த நிலைக்கு காரணமான மருத்துவமனை மீதும் மற்றும் மருத்துவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய தருமபுரி நகர காவல் நிலையத்தில் காயத்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் இது போன்ற சம்பவ இனி நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும், மருத்துவரின் பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.23 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
- ஜிப்மர் சென்ற அவருக்கு பரிசோதனை செய்தும் வலி குறையவில்லை.
புதுச்சேரி:
புதுவை பெருமாள் கோவில் வீதியை சேர்வந்தவர் ராஜராஜேஸ்வரி. தகவல் தொழில்நுட்ப வல்லுநராக பெங்களூருவில் பணியாற்றி வந்தார். வயிற்று வலிக்கு சிகிச்சை பெற புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்குக்கு சென்றார். அங்கு அவருக்கு கர்ப்பபையில் நீர்க்கட்டி இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் என டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.
கடந்த 28.12.2015-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் நீர்க்கட்டிகளை அகற்றி மறுநாள் டிஸ்சார்ஜ் செய்தனர். அதன்பிறகும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரித்தது. மீண்டும் ஜிப்மர் சென்ற அவருக்கு பரிசோதனை செய்தும் வலி குறையவில்லை.
அறுவை சிகிச்சை காயத்திலிருந்து மலம் வெளியேறியதால் மீண்டும் பரிசோதனை செய்தனர் . அப்போது பெருங்குடலில் ஒரு செ.மீ அளவு துவாரம் இருந்தது. இதனால் மலம் வயிற்றில் கசிந்து செப்டி சீமியா ஏற்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் 2016-ம் ஆண்டு பல உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இறந்தார். அறுவை சிகிச்சையில் அலட்சியமாக இருந்ததால் ஒரே மகள் இறந்துவிட்டதாக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவரின் பெற்றோர் புகார் அளித்தனர்.
நீதிபதி பொங்கியப்பன், சுந்தரவடிவேலு, உமாசங்கரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் அறுவை சிகிச்சையில் கவனத்துடன் செயல்படவில்லை என உறுதியானது.
எனவே அறுவை சிகிச்சை செய்த மகளிர் மருத்துவ நிபுணரும், ஜிப்மர் ஆஸ்பத்திரியும் ராஜ ராஜே ஸ்வரியின் பெற்றோருக்கு 9 சதவீத வட்டியுடன் ரூ.22 லட்சத்து 94 ஆயிரத்து 986 இழப்பீடாக வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- டாக்டர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
- பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் போராட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமீனா (வயது26) நிறை மாதகர்பிணியான இவர் கடந்த 13ம் தேதி அறந்தாங்கி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் ஜோதிமீனா உயிரிழந்துள்ளார்.அதே போன்று கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி (26)என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுகபிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ராஜலட்சுமிக்கு உதிரப்போக்கு அதிகமாக காணப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பணியில் இருந்த மருத்துவர்கள் இரத்தப்போக்கை நிறுத்துவதற்காக கர்ப்பப்பையை நீக்கியுள்ளனர். ரத்தபோக்கு நிக்காததால், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி ராஜலட்சுமி மற்றும் உயிரிழந்த ஜோதிமீனா உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோஷங்களை எழுப்பினர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராமு, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தின்போது பணியிலிருந்த மருத்துவர் சாரதா, செவிலியர் பரமேஸ்வரி, உதவியாளர் முத்துலெட்சுமி ஆகிய 3 பேரை பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டார். மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்