search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தவறான சிகிச்சையால் பெண் பலி
    X

    கோப்பு படம்.

    தவறான சிகிச்சையால் பெண் பலி

    • ரூ.23 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
    • ஜிப்மர் சென்ற அவருக்கு பரிசோதனை செய்தும் வலி குறையவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை பெருமாள் கோவில் வீதியை சேர்வந்தவர் ராஜராஜேஸ்வரி. தகவல் தொழில்நுட்ப வல்லுநராக பெங்களூருவில் பணியாற்றி வந்தார். வயிற்று வலிக்கு சிகிச்சை பெற புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்குக்கு சென்றார். அங்கு அவருக்கு கர்ப்பபையில் நீர்க்கட்டி இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் என டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.

    கடந்த 28.12.2015-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் நீர்க்கட்டிகளை அகற்றி மறுநாள் டிஸ்சார்ஜ் செய்தனர். அதன்பிறகும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரித்தது. மீண்டும் ஜிப்மர் சென்ற அவருக்கு பரிசோதனை செய்தும் வலி குறையவில்லை.

    அறுவை சிகிச்சை காயத்திலிருந்து மலம் வெளியேறியதால் மீண்டும் பரிசோதனை செய்தனர் . அப்போது பெருங்குடலில் ஒரு செ.மீ அளவு துவாரம் இருந்தது. இதனால் மலம் வயிற்றில் கசிந்து செப்டி சீமியா ஏற்பட்டுள்ளது.

    அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் 2016-ம் ஆண்டு பல உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இறந்தார். அறுவை சிகிச்சையில் அலட்சியமாக இருந்ததால் ஒரே மகள் இறந்துவிட்டதாக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவரின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    நீதிபதி பொங்கியப்பன், சுந்தரவடிவேலு, உமாசங்கரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் அறுவை சிகிச்சையில் கவனத்துடன் செயல்படவில்லை என உறுதியானது.

    எனவே அறுவை சிகிச்சை செய்த மகளிர் மருத்துவ நிபுணரும், ஜிப்மர் ஆஸ்பத்திரியும் ராஜ ராஜே ஸ்வரியின் பெற்றோருக்கு 9 சதவீத வட்டியுடன் ரூ.22 லட்சத்து 94 ஆயிரத்து 986 இழப்பீடாக வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×