search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MMnews"

    • ரஜினியை முதல்வர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
    • நடிகர் ரஜினி நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜெயிலர்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு சென்றார்.

    பின்னர், உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தை நடிகர் ரஜினி, அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் பார்த்தார். இவர்களுடன் லதா ரஜினிகாந்தும் இருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

    அங்கு, யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி காந்த் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். ரஜினியை முதல்வர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன், ரஜினியின் மனைவி லதா ரஜினி காந்தும் உடன் இருந்தார்.

    நடிகர் ரஜினி நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.
    • விபத்து நடந்தபோது இரண்டு ரெயில்களும் அதிவேகத்தில் சென்றதால் பாதிப்பு அதிகம் என தகவல்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மாலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், ரெயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ரெயில்வேயின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சர்மா தெரிவித்தார்.

    ரெயிலில் நேற்று இரவு 7 மணியளவில் பயணிகள் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோசமான ரெயில் விபத்து நடந்துள்ளது.

    சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ், தடம் புரண்டு சரக்கு ரெயிலில் மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளன.

    அப்போது, யஸ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. விபத்து நடந்தபோது இரண்டு ரயில்களும் அதிவேகத்தில் சென்றன.

    மேலும், நேற்று மாலை 6.50 முதல் 7.10 மணிக்குள் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

    ×