search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "molestation case"

    தேன்கனிக்கோட்டை அருகே வெவ்வேறு பாலியல் பலாத்கார வழக்கில் 4 இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த நாராயணப்பா - சீத்தம்மாள் தம்பதியினர். இவர்களது மகள் சுஜாதா(26). திருமணமாகாத இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சுஜாதா கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த பில்லப்பா மகன்களான முனிராஜ்(21), ராமமூர்த்தி(22) ஆகியோர், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து சுஜாதாவை பாலியல் பலத்காரம் செய்துள்ளனர்.

     இது குறித்து அவரது அம்மா சீதம்மாள், தேன் கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, முனிராஜ், ராமமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

    இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், பாலியல் பலத்காரம் செய்த குற்றத்திற்காக முனிராஜ், ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

    இதேபோல் தேன்கனிக்கோட்டை அடுத்த பாலதொட்டனப்பள்ளியை சேர்ந்தவர் குலாப்ஜான். இவரது வாய் பேச முடியாத ஊமை மகள் நஸ்ரீன்(20). இவர் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி காலை 8 மணிக்கு அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். 

    அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த வீரேந்திரன்(27), அவரது நண்பரான சந்தோஷ்(22) ஆகிய இருவரை அந்த பெண்ணை வலுகட்டாயமாக வீரேந்திரன் வீட்டிற்கு இழுத்து சென்று பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். 

    இது குறித்து நஸ்ரீனின் அம்மா பபிதா தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வீரேந்திரன், சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

    இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் வீரேந்திரன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

    இந்த இருவழக்கிலும் சிறைத்தண்டனை பெற்ற 4 இளைஞர்களையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து சென்று அடைத்தனர். இந்த இரு வழக்கிலும் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார். 
    மகாராஷ்டிராவில் 12 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 45 வயது பெண்ணுக்கு ஜாமின் வழங்க மும்பை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #minorboymolested #mumbaiboymolested
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பாந்த்ரா பகுதியில் உள்ள தாயாரை பார்க்க 12 வயது சிறுவன் கடந்த 5ம் தேதி  தனது உறவினர்களுடன் சென்றான். அங்கு தாயார் இல்லாததால் வீட்டின் வெளியே காத்திருந்தான்.

    இதை கவனித்த பக்கத்து வீட்டு பெண்மணி அந்த சிறுவனை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுவன் தந்தையிடம் தெரிவித்தான்.

    சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜாமின் கிடைக்க வேண்டும் என அந்த பெண் மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பெண்மணிக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது. #minorboymolested #mumbaiboymolested
    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #CuddaloreStudents #CuddaloreCourt
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே இட்லி கடை நடத்தி வந்தவர் தனலட்சுமி (வயது 40).

    கடந்த 2014-ம் ஆண்டு அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி தனலட்சுமியின் இட்லி கடைக்கு அடிக்கடி சென்று இட்லி வாங்கி சென்றார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து தனலட்சுமி அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் பள்ளியிலும், உறவினர்களிடம் தெரிவித்து விடுவதாக கூறி மிரட்டினார்.

    மேலும் நெல்லிக்குப்பம் திருகண்டேஸ்வரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருடன் பல்வேறு பகுதிகளுக்கு மாணவியை அனுப்பி வைத்தார். தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் அந்த மாணவி கதறி அழுதார். அப்போது வேறு ஒரு மாணவியை என்னிடம் அழைத்து வந்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்று தனலட்சுமி கூறினார்.

    அதை நம்பி அந்த மாணவி தன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மற்றொரு மாணவியை தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த மாணவியை அறையில் அடைத்து வைத்து 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    மேலும் 2 மாணவிகளையும் திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவரது வீட்டுக்கு தனலட்சுமி அனுப்பி வைத்தார். அவர் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் தனலட்சுமி 2 மாணவிகளையும் விருத்தாசலம், வடலூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த விபசார கும்பலிடம் விற்றார்.

    அந்த கும்பலிடம் சிக்கிய 2 மாணவிகளும் தப்பி திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் 5.8.2014 அன்று தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி கூறினர்.

    இதையொட்டி மதபோதகர் அருள்தாஸ் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 17 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதி உள்ள சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

    அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் உறவினர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு 4.7.2016 அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தீபா துரித விசாரணை நடத்தி கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் கடந்த 4-ந் தேதி நடந்தது. மாணவிகளை பாலியலில் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் அருள்தாஸ் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

    1) கலா (48), விருத்தாசலம்.

    2) தனலட்சுமி, திட்டக்குடி.

    3) ஸ்ரீதர் (23), ஊ.மங்கலம், காட்டுக்கூனங்குறிச்சி.

    4) பாத்திமா (35), வளவனூர்.

    5) ராதா (35), நெல்லிக்குப்பம், சுல்தான்பேட்டை.

    6) ‌ஷர்மிளாபேகம் (34), விருத்தாசலம்.

    7) கவிதா (34), வடலூர்.

    8) அன்பழகன் (28), சேலம், அயோத்தியாபட்டினம்.

    9) அமுதா (28), சேலம்.

    10) மோகன் (28), திட்டக்குடி.

    11) மதிவாணன் (23), திட்டக்குடி.

    12) அன்பு, விருத்தாசலம்.

    13) ஆனந்தராஜ், நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரம்.

    14) பாலசுப்பிரமணியன் (42), புதுப்பேட்டை, விருத்தாசலம்.

    15) ராதிகா (30), பண்ருட்டி.

    16) மதபோதகர் அருள்தாஸ், திட்டக்குடி.

    பண்ருட்டியை சேர்ந்த மகாலட்சுமி மீது போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகள் அனைவருக்கும் இன்று (திங்கட்கிழமை) தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வ பிரியா ஆஜராகி வாதாடினார்.

    அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு குற்றவாளிகள் அனைவரும் கடலூர் சிறையில் இருந்து மகளிர் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.



    பின்னர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நீதிபதி லிங்கேஸ்வரன் விசாரணை நடத்தினார். அதன் பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரத்தை நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார்.

    மதபோதகர் அருள்தாசுக்கு 30 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் தண்டனையும், கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதித்த நீதிபதி லிங்கேஸ்வரன் மேலும் தண்டனை விபரங்களை தொடர்ந்து வாசித்து வருகிறார். #CuddaloreStudents #CuddaloreCourt

    பாலியல் பலாத்கார வழக்கில் திருவண்ணாமலை கோர்ட்டில் ரஷிய இளம்பெண் ஆஜரானார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள கஸ்தூரி நகரில், தனியாருக்கு சொந்தமான அபார்ட் மென்டில் தங்கி இருந்த ரஷிய நாட்டை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ரஷிய இளம்பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த நீலகண்டன் (35), அவரது தம்பி பாரதி (31), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணா மலை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ரஷிய இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்தார். தற்போது அவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி உள்ளார்.

    நேற்று மாலை இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நீதிபதி (பொறுப்பு) தேவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ரஷிய இளம்பெண் ஆஜராகி தனது தரப்பு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்தார்.

    பிரான்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய பாதிரியார் தேவாலயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
    பாரீஸ்:

    பிரான்சில் ரோயன் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ஜீன் பாப்ஸ்டிக் செபே (38).

    இவர் ஒரு இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக ஆர்ச் பி‌ஷப்பிடம் புகார் கூறப்பட்டது.

    இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாதிரியார் செபே ரோயன் நகரில் உள்ள 23-வது புனித ஜீன் தேவாலயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த தகவலை ரோயன் கிறிஸ்தவ திருச்சபை உறுதி செய்துள்ளது.

    கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் மீது செக்ஸ் புகார் கூறப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பென்சில் வேனியாவில் கடந்த 70 ஆண்டுகளில் 1000 சிறுவர்-சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக 300 பாதிரியார்கள் மீது புகார் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரமத்தில் இருந்து அவர் தலைமறைவாகி விட்டார். #nithyananda
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகில் உள்ள பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார்.

    இந்த ஆசிரமத்தில் பெண் பக்தர்களை நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று நித்யானந்தா வின் சீடர் லெனின் 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகார் குறித்து பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராம்நகர் மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    கடந்த 6-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நித்யானந்தா அலட்சியம் காட்டி வருகிறார் என்று குறிப்பிட்ட நீதிபதி உடனே நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட்டார்.

    ஜாமீனில் அவர் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் பிறப்பித்தார். இதையடுத்து நித்யானந்தாதாவை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள்.



    அவரை தேடி ஆசிரமம் சென்றனர். அங்கு போலீசார் தீவிர சோதனை செய்தார்கள். ஆனால் நித்யானந்தா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் மற்ற ஆசிரமங்களிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    வருகிற 14-ந்தேதி நித்யானந்தா மீதான வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராவார் என்று பிடதி ஆசிரம வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.#nithyananda
    ×