search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mosquito breeding"

    • ‘லார்வா’ புழுக்களை ஒழிக்க எண்ணை பந்துகளை வீச உத்தரவிடப்பட்டது.
    • தேவையற்ற பொருள்கள் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவு படி, துணை கமிஷனர் தானுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைபடி மாநகர பகுதிகளில் உள்ள காலி மனைகள், குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீரால் உற்பத்தியாகும் 'லார்வா' புழுக்களை ஒழிக்கும் வகையில், எண்ணை பந்துகளை வீச உத்தரவிடப்பட்டது.

    அதன் படி மேலப்பாளையம் உதவி கமிஷனர் (பொறுப்பு ) காளிமுத்து, சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாள நடராஜன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்க ஆயில் பந்துகளை வீசினர்.

    மேலும் வீடுகள், பள்ளிகள் அருகில் கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள இடங்களான பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருள்கள் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதபோல் டெங்கு தடுப்பு பணியாளர் மூலமாக கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கொசு புழுக்களை அழிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

    • வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பொது மக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும்.

    பல்லடம் :

    பல்லடம்,கொசு உற்பத்தியை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார ஆய்வாளர் விளக்கம் அளித்தார். இதுகுறித்து பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர் கூறியதாவது:-

    பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனினும் பொது மக்களது ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்தப் பணியை முழுமையாக செயல்படுத்த முடியும். வீட்டில் குப்பைகள்,பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும் பொது மக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். அந்த தண்ணீரை அப்புறப்படுத்துமாறு கூறினாலும், பொது மக்கள் கேட்பதில்லை நிறைய வீடுகளில வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் 'டயர்'களில் தண்ணீர் தேங்கி, அதில் கொசு உற்பத்தியாகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற சாக்கடைகள் உள்ளன. ஆனால், பல இடங்களில் சாக்கடையில் குப்பை போன்றவற்றை போட்டுவிடுவதால் அங்கு கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாகி விடுகிறது. இதுபோன்ற நிலையை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • முக்கிய வழித்தடங்களில் தண்ணீர் தேக்கமடைகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையின்போது பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு என முக்கிய வழித்தடங்களில் தண்ணீர் தேக்கமடைகிறது. இதேபோல சில பள்ளிகளின் வளாகத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு, போதிய வடிகால் வசதி இல்லாததே காரணமாகும். சில பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல், கழிவுநீரோடு சேர்ந்து தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.குடியிருப்பு மற்றும் ரோடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொள்வதால் அப்பகுதிகளை கடக்க முடியாமல் மக்கள் மிகவும் அவதியடைகின்றனர்.

    இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:- நகரின் பிரதான ரோடுகளின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் ரோட்டில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இதேபோல சில பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை அப்புறப்படுத்த உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுப்பதில்லை. மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறுகிறது.மழையால், நகரில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×